சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தர்பூசணி விதைகளை இப்படி சாப்பிட்டாலே போதும்... சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்....

 
Published : May 23, 2018, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தர்பூசணி விதைகளை இப்படி சாப்பிட்டாலே போதும்... சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்....

சுருக்கம்

Suppose watermelon seeds can be used to control sugar syrup ...

தர்பூசணி விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. எனவே, தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அந்த நீரைக் குடித்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

தர்பூசணி விதையில்...

விட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்

** ஒரு கையளவு தர்பூசணி விதையை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி 3 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

** இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

** அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

** தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடிக்க வேண்டும்.

** தர்பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது. எனவே அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

** தர்பூசணி விதைகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளில் உள்ள அர்ஜினைன் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணமாகும்.

** தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி