Diwali Legiyam: தீபாவளி திண்பண்டங்களால் உண்டாகும் செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும் சூப்பரான லேகியம்!

By Dinesh TGFirst Published Oct 26, 2022, 2:18 PM IST
Highlights

தீபாவளி லேகியத்தை எப்படி தயாரிப்பது எனத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தித்திக்கும் தீபாவளி இனிதாக நிறைவு பெற்றுவிட்டது. தீபாவளியை முன்னிட்டு நமது வீடுகளில் பலவிதமான இனிப்பு வகைகள் மற்றும் காரமான பண்டங்களும் தயாராகி இருக்கும். கடந்த இரு நாட்களாக இவற்றைச் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் செரிமானம் அடைய எளிதாக தயாரிக்கப்படுவது தான் தீபாவளி லேகியம். இதனை இன்று பெரும்பாலான வீடுகளில் யாரும் செய்வதில்லை. ஏனெனில், பலரும் இது பற்றி அறியாமல் இருக்கின்றனர். அந்த காலத்தில், தீபாவளி லேகியம் எல்லோர் வீடுகளிலும் செய்யப்படும் மிக முக்கியப் பண்டமாக இருந்தது. இதன் செய்முறை மிக எளிமையானது. தீபாவளி லேகியத்தை எப்படி தயாரிப்பது எனத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தீபாவளி லேகியம் செய்முறை

முதலில் பச்சரிசி, திப்பிலி மற்றும் சுக்கு ஆகியவற்றை நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர், வெறும் வாணலியில் இந்தப் பொடியை போட்டு, வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். வறுபட்ட பிறகு, அதனை எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர், ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு கப் அளவு தண்ணீரை ஊற்றி, இந்தக் கலவையை குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

Agathi Keerai: ஆரோக்கியம் காக்கும் அகத்திக் கீரை: அளப்பரிய மருத்துவப் பலன்கள் இதோ!

கலவை நன்றாக ஊறிய பின், மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்க வேண்டும். வாணலியில் வெண்ணெயை உருகவிட்டு, பின்னர் அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயை உருக்கிய அதே பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த விழுதை ஊற்றி, கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பின்னர், அதில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு, வெல்லம் கரைந்து லேகியத்துடன் சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியே 20 நிமிடம் கிளறி விட வேண்டும். கிளறும் போது லேகியம் கெட்டியாக மாறினால், அதன் மேலே நெய்யை ஊற்றி விட்டு கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் மேலே மிதக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து விட வேண்டும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய வெஜிடபிள் சீஸ் தோசை!!!

செரிமானப் பிரச்னைகள் அகலும்

சூடு ஆறியதும் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, அதனுடன் சிறிதளவு தேனை சேர்த்து கிளறி விட்டால் தீபாவளி லேகியம் ரெடியாகி விடும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதனை சிறிதளவு சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், முக்கியமாக வாய்வுத் தொல்லை அறவே நீங்கும்.

click me!