இன்றைய காலகட்டத்தில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பேன் தொல்லை அதிகமாக இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது போலவே, தலைமுடி ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். இல்லையெனில், பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பேன் தொல்லை அதிகமாக இருக்கிறது.
பேன் தொல்லை
undefined
நமது இரத்தத்தை உறிஞ்சி, உணவாக உட்கொள்ளும் இந்த பேன்கள் மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்து, நம் கூந்தலியே முட்டையை இடுகின்றன. இதன் காரணமாக அரிப்பும், கூந்தலுக்கு அழகின்மையும் ஏற்படுகிறது. தலையில் பேன்களை அழிப்பதற்கு, இயற்கை முறையிலேயே ஒருசில எளிய வழிகள் உள்ளது. இப்போது அவ்வழிகளை பார்ப்போம்.
பேன்களை ஒழிக்க டிப்ஸ்
சீத்தாப்பழ விதைகளை காய வைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இதனை சிறிதளவு எடுத்து, சீயக்காயில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் ஈறு மற்றும் பேன் தொல்லை விரைவில் குறையும்.
50 கிராம் வேப்பம் பூவை எடுத்து, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால், பேன் தொல்லை குறையும்.
வேப்பிலைத் தூள் அரை தேக்கரண்டி, கடுக்காய்த் தூள் அரை தேக்கரண்டி, வெந்தயத் தூள் 2 தேக்கரண்டி, பயத்தமாவு 2 தேக்கரண்டி மற்றும் எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி ஆகியவற்றுடன் வெந்நீரைக் கலந்து தலையில் பூசிக் கொண்டு, பத்து நிமிடங்கள் கழித்து தலையை அலசிக் குளித்தால் பேன் தொல்லை முற்றிலுமாக குறையும்.
வசம்பை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், தலை முடியை தண்ணீரில் நன்றாக அலசினால் பேன் தொல்லை வெகு விரைவாக குறைந்து விடும்.
Black gram porridge: உடலில் இரத்தம் குறைவாக இருக்கா? கவலையே வேண்டாம்: இதை சாப்பிங்க போதும்!
துளசி இலையை நன்றாக மைய அரைத்து, தலையில் தடவி சிறிது நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசினால், பேன்கள் இறந்து உதிர்ந்து விடும். மேலும் கூந்தலும் நன்றாக வளரும்.
வால் மிளகை ஊற வைத்துப் பால் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இதனை தலையில் தடவி ஊறிய பின் தலைக்கு குளிக்க, பேன் தொல்லை குறைந்து விடும்.
மேற்கண்ட எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். தலையில் இருக்கும் பேன்களை முற்றிலுமாக ஒழித்து விடலாம். அதோடு, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.