தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும் கீரை பற்றி தெரியுமா?

 
Published : Feb 14, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும் கீரை பற்றி தெரியுமா?

சுருக்கம்

தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும் கீரை "கொத்தமல்லிக்கீரை"...

கொத்தமல்லிக்கீரையை வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

1.. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

2.. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும்.

3.. வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

4.. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

5.. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

6.. இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

7.. கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

8.. பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

9.. முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

10.. கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையதாக இருந்தாலும் ருசி மிக்கது.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி