சில நோய்களும் அவற்றிற்கான வீட்டு வைத்தியங்களும்…

 
Published : Apr 28, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சில நோய்களும் அவற்றிற்கான வீட்டு வைத்தியங்களும்…

சுருக்கம்

Some diseases and their home remedies

பருக்கள் வராமல் இருக்க

இரண்டு இஞ்சித் துண்டுகளை இடித்து சாறு எடுத்து பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவினால் 3 நாட்களில் குணமாகும்.

நெஞ்சு சளி:

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

தலைப்பாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

குழந்தைகள் கொழு கொழு என்று இருக்க:

தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, காரட், தக்காளி, கொண்டைக்கடலை இவைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் கொழு கொழு என்று வளரும்.

தொப்பை குறைக்க

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்