குறட்டை மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

First Published Jan 5, 2017, 1:21 PM IST
Highlights


குறட்டை விட்டு நிம்மதியாக தூங்குகின்றான் என்று கூறுவார்கள் ஆனால் உண்மை அதுவல்ல.  குறட்டை என்பது ஒரு நோய் குறட்டை விடுபவர்கள் அரை தூக்கத்தில் தான் எப்போதும் தூங்குவார்கள்.  இப்படி குறட்டை விட்டு தூங்குபவர்களை தொட்டாலே போதும் அவர்களுக்கு விழிப்பு வந்துவிடும்.

இந்த குறட்டை வருவதற்கான காரணம் என்னவென்றால் டான்சிலின் வளர்ச்சி தான்.  பொதுவாக பதின்ம (டீன் ஏஜ்) வயதிலேயே டான்சில் முழு வளர்ச்சி பெற்றுவிடும்.  

சிலருக்கு இதையும் மீறி கொழுப்பு மற்றும் அதீத ஹார்மோன் காரணமாக டான்சில் வளர்ந்துகொண்டே இருக்கும்.  இது மூச்சுக் குழாயில் உள்ள அடைப்பினால் காற்று சரியாக சென்று வர முடியாமல் வாய்வழியே வரும் போது தொண்டை சுவரில் மோதி சத்தத்தை ஏற்படுத்துகின்றது.

இது அருகில் இருப்பவர்களையும் தூங்கவிடாது.  இது நம் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாதது மட்டுமின்றி நமக்கு இருதய பாதிப்புகள் அதிகம் தோன்றுகின்றன.

குறட்டை என்பது மூச்சுக்காற்று சிறிய பாதைவழியாக வரும் போது தோன்றும் சத்தம். இது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

இந்த குறட்டையானது அதிக குண்டானர்வர்கள், கழுத்துப்பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்கள் ஆகியவர்களுக்கு வருகின்றது. உள்நாக்குப் பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது.

குறட்டை நீங்க நமது மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி பெரிதாக்க வேண்டும். இதற்கு இரவு தூங்கையில் ஜலதோஷத்திற்கு பயன்படுத்தும் மருந்துக்களை மூக்கில் தடவிவிட்டு உறங்கலாம்.

கற்பூரவள்ளி இலையை நன்றாக கசக்கி அதை மூக்கில் முகர்ந்து பார்த்துவிட்டு உறங்கலாம்.  

மூச்சுக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்ய, துளசி இலையை பத்து இலைகள் பறித்து அதனுடன் மிளகு ஐந்து எடுத்து நன்றாக மென்று விழுங்கவும். இது மூச்சுக் குழாயில் உள்ள சளி மற்றும் அடைப்பினை நீக்கி பெரிதாக்கும்.  இதனால் குறட்டை நீங்கிவிடும்.

பால் பொருட்களை இரவில் உறங்கும் போது சுத்தமாக தவிர்க்கவும்.

வயிறு நிறைய உணவு உண்டுவிட்டு உறங்காமல் சிறிது உணவு மட்டும் உண்டுவிட்டு சிறிது நேரம் காலாற நடக்கவும்.  

பால் கலக்காத தேனீரை இஞ்சிச்சாற்றோடு கலந்து குடிக்கலாம் இதனால் மூச்சுக் குழாய் அடைப்பு நீங்கிவிடும்.  

மது மற்றும் சிகரெட் பிடித்தல் மூச்சுக் குழாயை பாதிப்படையச் செய்து தசையை வளர்க்கின்றது.  இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.

click me!