காய்ச்சலுக்கு ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது மது அருந்தலாமா?

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 4:13 PM IST
Highlights

ஆண்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து) மருந்துகளை சாப்பிடும் போது, ஆல்கஹால் கொண்ட மதுவை அருந்தலாமா? வேண்டாமா? என்கிற ஆலோசனைகள் அனைவருக்கும்  வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டாதா ? என்பது விவாதத்திற்குரியது தான். அதனால் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையில் இருக்கும் போது,  மது அருந்துவது சரிதானா? மருத்துவரின் அறிவுரையும் மீறி மது அருந்தினால் என்ன நடக்கும்? ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது மது குடிப்பதால் வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுமா? என்கிற பல்வேறு சந்தேகங்கள் மது குடிக்கும் பலருக்கும் உண்டு. அதையொட்டி ஆல்கஹால் கொண்ட மது மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் என இரண்டுக்குமான பண்புகளின் அடிப்படையில் சில விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.
 

ஆல்கஹால் என்றால் என்ன?

நாம் தினசரி பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் ஆல்கஹால் உண்டு. அதாவது கரைப்பான்கள் (பாத்ரூம் கிளீனர், டாய்லட் க்ளீனர்...), கையை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி, அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மது பானங்களில் காணப்படும் குறிப்பிட்ட ஆல்கஹால் எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் என்று குறிப்பிடப்படுகிறது. தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து பெறப்படும் சர்க்கரைகள் ஈஸ்ட் கொண்டு புளிக்கவைக்கப்படும் போது எத்தனால் கிடைக்கிறது. இதுவே பின்நாளில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஆல்கஹால் ஒன்றும் மாற்று வேதியல் பொருள் கிடையாது என்பது தெரியவருகிறது

உடலுக்குள் செல்லும் ஆல்கஹால் என்ன செய்யும்?

நீங்கள் குடம் குடமாக ஆல்கஹாலை குடித்தாலும், அதனுடைய ஒரு சிறு பகுதி மட்டுமே வயிற்றில் அசிடால்டிஹைடாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது. மீதமுள்ள ஆல்கஹால் இரத்த ஓட்டத்தில் கலந்து வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள ஆல்கஹால் கல்லீரலை விட்டு வெளியேறி, பொது சுழற்சியில் நுழைந்து, உடலின் திசுக்கள் வழியாக விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு முதல் வளர்சிதை மாற்றம் என்று பெயர். அதற்கு பிறகும் மீதமுள்ள ஆல்கஹால் பல நொதிகளால் இரண்டாவது மற்றும் இறுதி முறையாக உங்கள் கல்லீரலுக்குத் திரும்புகிறது. அவை உயிர்வேதியியல் எதிர்வினைகளை ஊக்குவிக்கும் புரதங்களாகும். இதையடுத்து மீதமுள்ள ஆல்கஹால் கார்பன் டை ஆக்சைடாகவும், சிறுநீராகவும் உங்கள் உடலை விட்டு வெளியேறும்.

நீண்ட நாட்கள் சமைக்காமல் வைத்திருந்த உருளைக் கிழங்கை சாப்பிடலாமா?

ஆண்டிபயாடிக்ஸ்

நுண்ணுயிர் தொற்றுகளை வளரவிடாமல் செய்வதற்கு தரப்படும் மருந்துதான் ஆண்டிபயாடிக். இதை உட்கொள்வதால், பாதிப்பு தரக்கூடிய பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன மற்றும் கல்லீரலால் வளர்சிதை மாற்றம் செய்யப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டில் ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது ஆல்கஹால் உட்கொண்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டன. இதற்காக 87 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டன. அதன்மூலம் ஆண்டிபயாடிக் சாப்பிடும் போது மது அருந்துவதால் எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படாது என்பது கண்டறியப்பட்டது. பென்சிலின் மாத்திரைகள், செஃப்டினிர், செபோடாக்சைம் போன்ற மருந்துகள், ஆல்கஹால் காரணமாக எந்தவிதமான எதிர்வினையும் செய்யவில்லை என்று ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!

ஆண்டிபயாடிக்ஸ், ஆல்கஹாலுடன் ஏற்படும் தொடர்பு

எனினும் ஆல்கஹாலின் பயன்பாடு சில ஆண்டிபயாடிக்ஸுடன் தொடர்புகொள்கிறது. ஆல்கஹால் ஒரு மருந்தின் வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடும்போது அல்லது மருந்து ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடும்போது இந்த இடைவினைகள் ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக, தினசரி அல்லது அடிக்கடி மது அருந்துவர்களின் உடல்நலத்தில் மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக காசநோய் பாதிப்புக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் மத்தியில் இதுபோன்ற பாதிப்பு அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு நுண்ணுயிர் பாதிப்புகளின் சிகிச்சைக்காக வழங்கப்படக்கூடிய erythromycin-னின் பயன்பாடு ஆல்கஹால் அருந்துவதால் தடைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

click me!