பிற்பகலில் குட்டித் தூக்கம் போட்டால், இவ்வளவு பயன்கள் கிடைக்கிறதா..??

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 7:03 PM IST

மனதுக்கும் சேர்ந்தும் புத்துணர்வு தரக்கூடியது உறக்கம். இரவு தூக்கம் அவசியம் என்றாலும், மதியநேரங்களின் போது வரக்கூடிய தூக்கம் மிகவும் அலாதியானது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பிற்பகலில் வேலைக்கு இடையில் போடும் குட்டித் தூக்கம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவந்துள்ளன.
 


மனிதனின் செயல்பாடுக்கு மூளை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியம். நமது மூளையின் செயல்பாட்டை வைத்து தான், நம்முடைய அறிவுதிறன் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து 24 மணிநேரமும் விழித்துக் கொண்டே இருக்கக்கூடிய திறன் மூளைக்கு உள்ளது. ஆனால் அதற்கும் ஓய்வு தேவை என்பது தான் நிதர்சனமானது. அதற்காக இருப்பதே உறக்கம். இது மூளைக்கு ஓய்வை அளித்து, பிறகு புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. நம்முடைய தூக்கத்தின் அளவை பொறுத்து தான் மூளையின் சிந்திக்கும் திறன், புத்தி கூர்மை, எண்ணவோட்டங்கள் போன்றவை வலுபெறுகின்றன. இரவுத் தூக்கம் மட்டுமின்றி பகல்நேரங்களில் ஏற்படும் உறக்கத்திலும் மூளைக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

பிற்பகல் தூக்கத்துக்கும் பயன் உண்டு

Tap to resize

Latest Videos

மனிதனுக்கு உறக்கம் சரியான நேரத்தில், சரியான அளவில் இருப்பது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பலரும் பிற்பகல் நேரத்தில் தூங்குவது உடலை சோம்பலாக்கி விடும் என்று கூறுவதுண்டு. ஆனால் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதற்கு மாறாக முடிவுகள் தெரியவந்துள்ளன. பிற்பகல் தூக்கம் மூளையை ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் இயங்கச் செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவகேடோ எண்ணெய் பலருக்கும் தெரியும்- ஆனால் அதனுடைய பலன் பற்றி தெரியுமா

பிற்பகல் தூக்கத்தினால் கிடைக்கும் நலன்

இதுதொடர்பாக சீனாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2214 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1534 பேரின் மூளை பிற்பகல் நேர உறக்கத்துக்கு பிறகு சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இயங்கவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஆய்வுக்காக வகுக்கப்பட்ட கேள்விகள் மூலம் இந்த முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதேசமயத்தில் பிற்பகலில் தூங்காதவர்களிடம் இதே கேள்விகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் பதிலளிக்க சற்று சிரமப்பட்டனர்.

புதிய அப்பாக்கள் குழந்தையுடன் உறவை வளர்ப்பதற்கான முக்கிய டிப்ஸ்..!

எதிர்ப்பு சக்தி மண்டலம் வலு பெறும்

உடல் இயக்கம் மட்டுமில்லாமல், பிற்பகல் உறக்கத்தால் உடம்புக்கு கிடைக்கும் நன்மைகளும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி பிற்பகல் தூக்கம் வெறும் 3 மணிநேரத்துக்குள் தான் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இதற்கு மிகவும் முக்கியம். ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள் போன்றவற்றை மதிய உணவாக உட்கொள்ளலாம். பிற்பகல் உறத்தின் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலங்கள் ஒழுங்குப்படுகிறது. மேலும் மன ஆரோக்கியமும் வலு பெறுகிறது.

click me!