அவகேடோ எண்ணெய் பலருக்கும் தெரியும்- ஆனால் அதனுடைய பலன் பற்றி தெரியுமா?

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 5:16 PM IST

அவகோடா எண்ணெய்யும்  இதனால் முடி வளர்ச்சிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விபரமாக பார்க்கலாம்.


உலகில் வாழும் மனிதர்கள் யாருக்கு தான் முடி உதிர்வு பிரச்னையில்லை. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கக்கூடிய தலையாய பிரச்னையாக இதுதான் இருக்கும். தலையில் இருக்கும் முடியின் அடர்த்தியை காத்துக்கொள்ள நம்மில் ஒவ்வொருவரும் போராடி வருகிறோம்.

கூந்தல் அல்லது முடி வளர்ச்சிக்கு சரும நிபுணர்கள் பலரும் பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். அதனால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய எண்ணெய்யை பலரும் விரும்புகின்றனர். இதற்காக சந்தைகளில் இயற்கையான முறையிலும் செயற்கை செறிவூட்டிகளையும் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் கிடைக்கின்றன. இதனால் பலன்களும் கிடைப்பதாக பயனாளிகளிடம் இருந்து கருத்துக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த வரிசையில் அவகோடா எண்ணெய்யும் சேர்ந்துகொண்டுள்ளது. இதனால் முடி வளர்ச்சிக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விபரமாக பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

அவகேடோ பழம்

இந்தியர்களிடையே அவகேடோ பழத்தை சாப்பிடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை விரும்புவோரிடம் இப்பழத்தை சாப்பிடும் பழக்கம் பரவலாக காணப்படுகிறது. இதை சாலட் செய்து சாப்பிடுவதற்கும், சாண்டுவெஜ் செய்வதற்கு உகந்த பலம் தான் அவகேடோ. இதை அவ்வப்போது தொடர்ந்து சாப்பிடுவோருக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவகேடோவில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அவகேடோ எண்ணெய்

இதை பழமாக தெரிந்து வைத்திருக்கும் பலருக்கும் அவகேடோ எண்ணெய் பற்றி தெரிந்திருக்கும். மனிதனுக்குரிய பல நன்மைகள் இதன்மூலம் கிடைக்கின்றன. இதற்கு அதிகளவு வெப்பத்தை தாங்கும் பண்புகள் இருப்பதால், சமையலுக்கும் அவகேடோ எண்ணெய் உகந்தது தான். அதேபோன்று இதை அழகுப்பராமரிப்புக்காகவும் பயன்படுத்தலாம்.

நிறைய கொழுப்புகள் நிறைந்தது

இந்த எண்ணெய்யில் நிறைய கொழுப்புகள் உள்ளன. ஹெச்.டி.எல் எனப்படுகிற நல்ல கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளது. மேலும் இது உடலுக்குள் சென்றவுடன் எல்.டி.எல் எனப்படுகிற கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எலும்புகளை பாதிக்கப்படக்கூடிய கீழ்வாதம் மற்றும் உடல் அழற்சி சார்ந்த விளைவுகளையும் அவகேடோ எண்ணெய் குறைக்கிறது.

உருளைக் கிழங்குகளை வெறுக்காதீர்கள்- இருதய நன்மைக்கு கிடைக்கும் அற்புதம்..!!

முடிக்கு உறுதி சேர்க்கும்

கேசத்துக்காக தயரிக்கப்படும் எண்ணெய்கள் பல திடமாகவும் கணமாகவும் உள்ளன. அது சருமத்தால் உறிஞ்சிட முடியாது. ஆனால் அவகேடோ எண்ணெய் அப்படி கிடையாது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இதிலிருக்கக்கூடிய ஓலிக் அமிலம் கூந்தலையும் முடியையும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. கூந்தலை மாய்சுரைசிங் செய்வதோடு மட்டுமில்லாமல், அடர்த்தி சேர்க்கிறது.

Dragon Fruit : டிராகன் பழம் குறித்து நீங்கள் அறிந்திராத முக்கியமான 5 விஷயங்கள்..!!

எப்படி பயன்படுத்தலாம்

அவகேடோ எண்ணெய்யை உச்சந்தலையில் இருந்து மசாஜ் செய்து தேய்க்கவும். இதன்மூலம் மயிர்கால்களின் விளிம்புகள் மென்மையடையும். எண்ணெய்யை முடியின் வேர் நன்றாக உறிஞ்சிக்கொள்ளும். நீங்கள் திட்டமிட்டு இதை தலைக்கு தேய்த்து வந்தால், முடியில் ஈரப்பதம் இருக்கும். மேலும் இதை ஒரு கண்டிஷனருக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். 

click me!