11 கிலோ வரை வளர்ந்த மார்பகங்கள்.. அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பெண் - அறுவை சிகிச்சையில் வெற்றி!

Published : Jan 21, 2023, 06:33 PM IST
11 கிலோ வரை வளர்ந்த மார்பகங்கள்.. அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பெண் - அறுவை சிகிச்சையில் வெற்றி!

சுருக்கம்

11 கிலோ எடையில் மார்பகங்கள் பெரிதாக வளர்ந்து அரிதான நிலையில் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஹரியானா ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள 23 வயது பெண் ஒருவருக்கு கர்ப்பத்திற்குப் பிறகு பெரிதாக  மார்பகங்கள் வளர்ந்துள்ளது. சுமார் 11 கிலோ எடையளவுக்கு வளர்ந்தது மார்பகங்கள்.

கடந்த 7 மாதங்களாக இந்த நோயால் அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணால் 5 நிமிடங்களுக்கு மேல் கூட நிற்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பெண், கர்ப்பகால ஜிகாண்டோமாஸ்டியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு அரிய நிலை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

இது அதிகப்படியான மற்றும் சமமற்ற மார்பக திசுக்களின் வளர்ச்சியின் காரணமாக மிகப்பெரிய மார்பகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, நோயாளி மிகப் பெரிய மார்பகங்களுடன் எங்களிடம் வந்தார்.

அவருக்கு முந்தைய ஆண்டுகளில் மூன்று கருக்கலைப்பு நடைபெற்று இருந்தது. அவர் மூன்றாவது கர்ப்பத்தின் போது இருதரப்பு கர்ப்பகால ஜிகாண்டோமாஸ்டியாவால் பாதிக்கப்பட்டார். பல மாதங்களாக இந்த நிலையில் இருந்து அவதிப்பட்டு இருந்ததாக எங்களுக்கு தெரிய வந்தது. 10 மணி நேரமாக நடைபெற்ற சிகிச்சையில் மார்பகம், நிப்பிள் அகற்றப்பட்டு ஸ்கின் கிராஃப்ட் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்த பெண், ‘இப்போது நான் முன்பு எப்படி இருந்தேனோ அதே போல் இருக்கிறேன். மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த அறுவை சிகிச்சையை முயற்சித்து, அதைச் செய்ததற்காக அமிர்தா மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்’ என்று அந்த பெண் கூறினார்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

PREV
click me!

Recommended Stories

2 நாட்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டால் எவ்வளவு உடல் எடை குறையும்? உண்மை என்ன?
Daily Banana: காலையில் வாழைப்பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? இந்த 5 பலன்கள் தெரியுமா?