வாசகர் கேள்வி பதில்கள்....

 
Published : Jun 06, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
வாசகர் கேள்வி பதில்கள்....

சுருக்கம்

Quires and answers with doctor

வாசகர் கேள்வி பதில்கள் 

      என் வயது, 42. அவ்வப்போதுநெஞ்சு வலி ஏற்படுகிறது. என் டாக்டர்களில் ஒருவர்சி.டி.ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவை எனக் கூறமற்றொருவர், "இன்வேசிவ் ஆஞ்சியோதேவை என்கிறார்? என்ன செய்வது?

ரூபா. சேலம்

      இதய ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை, சி.டி., கொரனரி ஆஞ்சியோ பரிசோதனை மூலம், கண்டறியலாம். இது, சில நிமிடங்களில், இதயத்தில் உள்ள அடைப்புகளை தெரிவித்து விடும்.

இப்பரிசோதனை மூலம், இதயத்தில் அடைப்பு உள்ளதா, இல்லையா என, கூற முடியும்.
ஆனால், இந்த அடைப்புக்கு, மருந்து மாத்திரையா அல்லது பலூன் சிகிச்சையா அல்லது பைபாஸ் சர்ஜரியா என,தெளிவுபடுத்தும் அளவு, சிகிச்சை முறை வளரவில்லை. சி.டி., ஸ்கேன் முடிவு நார்மலாக வந்தால், "இன்வேசிவ் ஆஞ்சியோகிராம்' தேவையில்லை. 
ஆனால், சி.டி., ஸ்கேன் பரிசோதனையில் அடைப்பு இருப்பதாக இருந்தால், இன்வேசிவ் ஆஞ்சியோதான், சிகிச்சை முறையை நிர்ணயிக்கும். இன்றும் ரத்தநாள அடைப்புக்கு, 100 சதவீத பரிசோதனை இந்த, "இன்வேசிவ் ஆஞ்சியோகிராம்' தான். இதில் கையில் இருந்தோ, காலில் இருந்தோ, "கதீட்டர்' என்னும் குழாயை செலுத்தி,இதயத்தினுள், பல கோணங்களில் படம் எடுக்கப்படுகிறது. 

நான் கடின வேலை செய்யும் தொழிலாளி வயது 52. எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்துஆறு மாதங்கள் ஆகின்றன. நான் கடின வேலையை மீண்டும் செய்யலாமா?


இராமநாதன் – மதுரை

      இதய ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளவர்கள், "ஸ்டென்ட்' சிகிச்சை பெற்றவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள்,எப்போதும் கடினமான வேலையை தவிர்ப்பது நல்லது. திடீரென, ஒரு கனமான பொருளை தூக்கினால், இதய துடிப்பும்,ரத்தஅழுத்தமும், திடீரென அதிகமாகிறது.

ரத்த நாளத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பாதிக்கப்படும் தன்மை உள்ளது.
ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளவர்கள், தங்கள் இதயத்தின் செயல்பாட்டு தன்மையை, ஒரு "ரப்பர் பாண்டு'டன் ஒப்பிடலாம். ரப்பர் பாண்டை ஓரளவே இழுக்கலாம். அதிகமாக இழுத்தால், அறுந்து போக வாய்ப்பு உள்ளது. அதுபோலத் தான், உங்கள் இதயமும்.

"ஓட்ஸ்உணவை உண்பதால் பயன் இருக்குமா?

ஓட்ஸ் உணவு வகைகளில் தான், எளிதில் கரையும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. இதில், "Tocotrienols' என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதனால் நம் உடலுக்கு பல நன்மை ஏற்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவதால், உணவுப் பாதையில் இருந்து கொழுப்பு சத்து, உடலில் சேர்வது குறையும். இதனால், கெட்ட கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. அதேநேரம், நல்ல கொழுப்பின் அளவை குறைப்பது இல்லை.


தினமும் ஒரு கப், ஓட்ஸ் உணவை தொடர்ந்து எடுத்தால், டோட்டல் கொலஸ்ட்ரால் அளவு, 2 சதவீதம் குறையும் என,தெரியவந்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவு.

   என் வயது, 25. இரு குழந்தைகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்டி.பி.இருப்பதாக அறிந்தேன். மாத்திரை எடுத்து வருகிறேன். நான்என் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகினால் அவர்களை பாதிக்குமா?

 ரகு – சென்னை 


'மைக்கோபாக்டீரியம் டியூபர்கியூள்' என்னும், டி.பி., நோய்க்கு காரணமான நோய் கிருமி, நாம் இருமும் போது, காற்றின் வழியே, ஒருவரிடம் இருந்து, மற்றொருவரிடம் பரவக் கூடியது. நாம் பகல் பொழுதில் இருமும் போதோ, தும்மு ம்போதோ கைக்குட்டை அல்லது துண்டை உபயோகிப்போம். ஆனால், இரவில், அவற்றை உபயோகிப்பதில்லை. அதனால், இரு மாதங்கள் வரை, குழந்தைகள் அருகில் உறங்க வேண்டாம். அது வரை, தனி அறையில் உறங்குவதே நல்லது. ஏனெனில்,

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!