மருத்துவ குணங்கள் அடங்கிய பப்பாளி....

 
Published : Jun 06, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மருத்துவ குணங்கள் அடங்கிய பப்பாளி....

சுருக்கம்

In Papaya there are more medical benefits

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியதால் பப்பாளி பழம் பழங்களின் ஏஞ்சல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பழத்தில் ஏராளமான சத்துக்களும், மருத்துவப் பயன்களும் அதிகமாக உள்ளது.

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், விட்டமின் A, C, E போன்ற உடம்பிற்கு ஆரோக்கியமான சத்துகள் நிறைந்துக் காணப்படுகின்றது.

  • பப்பாளிக் காயை தினமும் கூட்டாக செய்து சமைத்து சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப்படியாக குறைந்து மெலிவடையும்.
  • நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின் ஊறியதும் சுடுநீரால் கழுவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து, வயிற்றுப் புண்கள் குணமாகும்.
  • பப்பாளிக் காயை குழம்பு வைத்து, அதை பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டால், பால் சுரப்பு அதிகமாகும்.
  • குழந்தைகளுக்கு தினமும் பப்பாளி பழத்தினை கொடுத்தால், குழந்தையின் உடல் வளர்ச்சி நன்றாகி, பல் எலும்பு போன்றவைகள் வலுவாக இருக்கும்.
  • தினமும் பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • பப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.
  • பப்பாளி பழத்தினை நாம் தினமும் உணவாக சேர்த்துக் கொண்டால், கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!