‘கால் ஆணி’யை எப்படித் தவிர்ப்பது?

 
Published : Jun 05, 2017, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
 ‘கால் ஆணி’யை எப்படித் தவிர்ப்பது?

சுருக்கம்

how to Avoid the leg damage

 ‘கால் ஆணி’ என்பது பலரையும் அவஸ்தைப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது.

கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போன்ற ஒரு தோற்றம் உருவாகும்.

பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, சீழ் கோர்த்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற்படும்.உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்றில்லை, சில நேரங்களில் தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.

கால் ஆணியைத் தவிர்க்க மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம்.

கால்களைச் சுத்தம் செய்த பின்னர், டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் போடலாம். மேலும்‘டிகெரட்டினைசேஷன் கிரீம்’ போன்ற மாய்ஸ்சரைசர் கிரீம்களை கால்களில் தடவலாம். இந்த கிரீம்களில் உள்ள கெரட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும்.


கால் ஆணி பிரச்சினைக்கு சுயமாக சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கலாம்.

குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்சினை பெரிதாகலாம். எனவே, டாக்டரை ஆலோசித்து அவர் சொல்கிறபடி நடப்பதுதான் சரியான வழி.


கால் ஆணி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களை சோப்பு போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

 சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!