
அரவிந்த் சேலம்
டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (AIIMS), அமெரிக்கா எமோரி பல்கலைக்கழகத்துடன் (Emory Global Diabetes Centre) இணைந்து எங்களின் மெட்ராஸ் டயாபடிக் ரிசர்ச் பவுண்டேஷன் சர்வதேச அளவில் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவுகளை, 'நியூட்ரிஷன்' என்ற சர்வதேச இதழில் வெளியிட்டுஇருக்கிறர்கள். அதன் விவரங்கள் இந்த ஆய்வை இந்தியா உட்பட தெற்காசியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள உணவுப் பழக்கத்தை ஒப்பிட்டுச் செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோயும், இதய நோய்களும் வராது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. காரணம், சைவ உணவு என்றால் வெறுமனே காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
ஆனால், சைவ உணவுப் பிரியர்கள், தங்கள் உணவுடன் எப்போதும் வறுத்த, பொரித்த உணவுகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பால் பொருட்கள், சாக்லேட் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுகின்றனர்.
அதனால், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும், இவர்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.
அதனால் தான் உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு படிவது போன்ற பிரச்னைகளும், இவற்றால் ஏற்படும் பிற உடல் கோளாறுகளும் சைவ உணவு, அசைவ உணவு என்ற பாகுபாடில்லாமல் இருந்தாலும், உடல் பருமனைப் பொறுத்தவரை சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக எடையுடன் உள்ளனர். அமெரிக்காவில், சைவ உணவு பிரியர்கள், அசைவ உணவு பிரியர்களை ஒப்பிடும்போது, தங்களின் உணவில், பழங்கள், முழு தானியங்கள், பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பருப்புகள், எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், பழச்சாறு, பாட்டில்களில் அடைக்கப்பட்ட கார்பனேடெட் பானங்கள் போன்றவற்றை குறைந்த அளவே பயன்படுத்துகின்றனர். அதனால், சைவம் என்றால் அது, 100 சதவீதம் சைவ உணவாக மட்டுமே இருக்க வேண்டும்; அப்போதுதான் பலன்.
மருத்துவர் . எஸ். எம். ராஜேந்திரன், ல்ஜஹ்ஹ
சமீப காலமாக யோகா மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் யோகா தீர்வு தருமா? ஏன் யோகா பயிற்சி செய்ய வேண்டும்?
சுகன்யா, மதுரை
என்ன பிரச்னை வந்தாலும் அதைத் திறம்பட கையாள்வதற்கான உடல், மன வலிமையை யோகா பயிற்சி செய்வதன் மூலம் பெற முடியும். உடற்பயிற்சி செய்யும்போது என்ன நடக்கிறது? நம் தசைகள் வலிமை பெறுகின்றன. உடலின் எல்லா பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராகிறது.
போதுமான அளவு ஆக்சிஜன் தசைகளுக்குக் கிடைக்கிறது. உடற்பயிற்சி மூலம் வெளிப்புற வலிமையைப் பெற முடியும். அதேநேரத்தில், யோகா பயிற்சி செய்தால், உடலின் உள்ளுறுப்புகள் வலிமை பெறும்.
சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் உட்பட உடலின் உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கும். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் சேர்ந்துள்ள நச்சு, தொடர்ச்சியாக யோகா பயிற்சி செய்யும்போது படிப்படியாக வெளியேறி விடும். உடலின் பிரதான உறுப்புகள் அனைத்தும மேல் பாகத்தில் உள்ளது. சிரசாசனம், சர்வாங்காசனம் உட்பட பெரும்பாலான ஆசனங்கள் செய்யும்போது, உடல் நன்றாக வளையும். இதனால், உடலின் மேல் பாகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் ஆக்சிஜனும் நன்றாகக் கிடைக்கும்.
வேறெந்த உடற்பயிற்சிகளைப் போலவும் இல்லாமல், யோகா பயிற்சியில், உடல், மனம் இரண்டும் இணைந்து செயல்படுவதால், இயல்பாக சுவாசத்தை கவனிக்கும் பயிற்சி வந்துவிடும். இதனால், செய்யும் வேலைகளில் மனம் ஒன்றி முழு கவனத்துடன் செயல்பட முடியும்.