பொதுவாக நொறு வகைகளில் உடலுக்கு நன்மை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். எனினும் மற்ற நொறுக்குத் தீனிகளுடன் ஒப்பிடும் போது பாப்கார்ன் பெரியளவு உடலுக்கு தீமை ஏற்படுத்துவது கிடையாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பக்கூடிய நொறு வகைகளில் ஒன்று பாப்கார்ன். இதை தமிழில் சோளப்பொரி என்று கூறப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொருட்காட்சிகளில், திரையரங்குகளில் பாப்கார்ன் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக நொறு வகைகளில் உடலுக்கு நன்மை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். எனினும் மற்ற நொறுக்குத் தீனிகளுடன் ஒப்பிடும் போது பாப்கார்ன் பெரியளவு உடலுக்கு தீமை ஏற்படுத்துவது கிடையாது. மாறாக அதை சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது என்பது தான் உண்மை.
பார்ப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், மெக்னீஷியம், நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் உள்ளிட்ட பலவிதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. எந்தவித எண்ணெய்யும் சேர்க்காமல் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முழு தானியத்தாலான பாப்கார்ன் செரிமானத்துக்கு உறுதுணையாக உள்ளது.
இந்த 5 உறுப்புகள் சரியாக இயங்கினால் தான் தாம்பத்யம் சிறக்கும்..!!
இதை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் கட்டிகளை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த குழாய்கள் மற்றும் தமனிகளில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன்காரணமாக இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ள முடிகிறது.
பாப்கார்ன் ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்த நொறுக்குத் தீனியாகும். அதேபோல இதை சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சிறப்பாக இயங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.
அளவுக்கு மீறினால் கால்களை பதம் பார்க்கும் யூரிக் அமிலம்- கவனம் இருக்கட்டும்..!!
உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை விடவும் ஒரு கிண்ணம் பாப்கார்ன் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு கிண்ணம் பாப்கார்னில் 30 கலோரிகள் உள்ளன. இதை ஒரு பாக்கட் உருளைக் கிழங்கு சிப்ஸுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு குறைவாகும். அதேநேரத்தில் இதில் இடம்பெற்றுள்ள நார்ச்சத்து நம் உடலுக்குள் அடிக்கடி தேவையில்லாமல் ஏற்படும் பசி உணர்வை கட்டுப்படுத்துகிரது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் பாப்கார்னை தாராளமாக சாப்பிடலாம்.