ஒழுங்கா பல் துலக்காவிட்டால் இதய நோய் பாதிக்கும் அபாயம்!

By Pani Monisha  |  First Published Dec 31, 2022, 3:43 PM IST

முதல்முதலாக எப்போது பல் துலக்கினீர்கள் என்பதை நினைவு வைத்துள்ளீர்களா? இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் பலரும் பல் துலக்கும்போது தவறு செய்கிறோம் என்றால், நம்பித்தான் ஆக வேண்டும். 


நம்முடைய ஆரோக்கியத்தின் நிலையை வாயை திறந்து பார்த்துதான் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். நம்முடைய பற்கள், நாவு, உதடு ஆகியவை ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும். இதில் பற்களின் நலனில் பல் துலக்கும் முறை முக்கிய பங்கு வகிக்கிறது. அது தொடர்பான சில உண்மைகளை இங்கு காணலாம். 

1. சாப்பிட்டதும் பல் துலக்கக் கூடாது 

Latest Videos

undefined

உணவு சாப்பிட்ட உடனேயே பல் துலக்குவது பற்களை சேதப்படுத்தும். இதனால் பற்களின் வெளிப்புற அடுக்கு பாதிப்படைகிறது. இறைச்சி, பாஸ்தா, மீன் ஆகிய அமில உணவுகளை உட்கொள்ளும்போதும் பற்சிப்பி பலவீனமடைகிறது. நாம் சாப்பிட்ட பின்னர் பல் துலக்குவதற்கு 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

2. சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட டூத் பிரஷ் 

பழங்காலத்தில் மக்கள் பற்கஈளை சுத்தம் செய்யாமல் தான் வாழ்ந்து இருக்கிறார்கள். அதன் பின்னர் கம்பளி துணியால் பல் துலக்கியிருக்கிறார்கள். இந்த முறையை விரும்பாத வில்லியம் அடிஸ் என்பவர் 1780ஆம் ஆண்டில் பிரஷை கண்டுபிடித்தார். அவர் இதை செய்தபோது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முதலில் பன்றியின் முட்கள் செருகுவதற்காக பசுவின் எலும்பில் துளைகளை வைத்து அதை உருவாக்கினார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உடனடியாக தனது கண்டுபிடிப்பை பெருமளவில் உற்பத்தி செய்ய ஒரு நிறுவனத்தையும் உருவாக்கினார். இப்படிதான் பிரஷ் உருவானது. 

இதையும் படிங்க; சீக்கிரமே விந்து வெளியேறிவிடுகிறதா? எளிமையான தீர்வு!

 3. ப்ளோரைடு பற்பசை 

 ஃப்ளோரைடு, பற்களை பலப்படுத்தும். ஃப்ளோரைடு பற்பசை பயன்படுத்தினால் பற்குழி விழுவது குறையுமாம். அதே சமயம் ஃப்ளோரைடு அதிகமானால் ஃப்ளூரோசிஸ் எனும் பற்சிதைவுக்கு வழி வகுக்கும். பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் பற்பசைகளில் ஃப்ளோரைடு கலந்துள்ளது. இது நமது பற்களின் எனாமலை நீக்குகிறது. இதனால் பற்களின் நிறமும் நாளடைவில் மங்கி விடுகிறது. 

4. மோசமான பிரஷ் 

சில பிரஷ் கடினமான முட்களை உடையது. இது பற்களை நன்கு சுத்தம் செய்யும் என மக்கள் நம்புகின்றனர். ஆனால் கடினமான முட்கள் கொண்ட பிரஷால் பல் துலக்கும் போது சிலருக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. மென்மையான முட்கள் கொண்ட பிரஷ் நல்ல தேர்வு. மென்மையான முட்கள் கொண்ட பிரஷ் பயன்படுத்தும் போதும் கடினமாக அழுத்தி தேய்பது தவறான விஷயம்.  

5. வாய் துர்நாற்றம் 

தினமும் எத்தனை முறை பல் துலக்குகிறோம் என்பது முக்கியமல்ல; நீங்கள் நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் வாய் துர்நாற்றம் இருக்கும். உங்கள் நாக்கு வெண்மையாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருந்தால், அதை சுத்தம் செய்ய வேண்டும் என்பதன் வெளிப்பாடாகும். இது பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பற்களை மட்டும் சுத்தப்படுத்திவிட்டு நாக்கினை அசுத்தமாக வைத்திருந்தால் துர்நாற்றம் வீசுவதோடு, பற்களும் பாதிப்படையலாம். உணவு சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளித்தால் பற்களுக்கு இடையே ஒட்டி இருக்கும் உணவு துணுக்குகள் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும். 

6.வெண்மையாக்கும் பேஸ்ட் தீமை 

வழக்கமான பற்பசையை விட வெண்மையாக்கும் பற்பசையில் அதிக ரசாயனப் பொருட்கள் உள்ளன. இது பற்களின் வெளிப்புற அடுக்கில் உள்ள கறைகளை நீக்குவதன் மூலம் வெண்மையை தரலாம். அதாவது காபி , சிகரெட் போன்ற கறைகள். ஆனால் உள்ளிருந்து பற்களை சேதமாக்கும். பற்கள் வெண்மையாக இருப்பதை விட சுத்தமாக இருப்பதுதான் அவசியம். 

இதையும் படிங்க; வெறும் 25 நிமிடங்களில் கேரட் கேக் ஆரோக்கியமான புத்தாண்டு ரெசிபிகள் இதோ!

7. டூத் பிரஷ்ஷில் பாக்டீரியா  

பல் துலக்கிய பிறகு நம் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் பிரஷில் இருக்கும். இவை சில நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். தண்ணீரில் கழுவினாலும் பாக்டீரியாக்கள் அதில் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரஷை மூடிய பொருள்களில் வைக்காமல் திறந்தவெளியில் வைப்பது பாக்டீரியாவை வளரவிடாது. 

8. இதய பிரச்சனைக்கு வாய்ப்பு 

நமது வாயை முறையாக சுத்தம் செய்யத் தவறினாலும், ஈறு தொடர்பான நோய்களை கவனிக்காமல் விட்டாலும் இதய நோய் வருவதற்கான ஆபத்து இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம், பாக்டீரியா தொற்று ஆகியவை ரத்தத்தில் கலந்து இதயம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கலாம். இந்த பல் பிரச்சனை இதய நாளங்களில் வீக்கத்தை தூண்டி இதய வால்வுகளை பாதிக்கலாம். ஆரோக்கியமான பற்கள் மற்றும் இதயத்தை பெற வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். 

9 . டூத் பேஸ்ட் முக்கியமில்லை! 

பற்களை ஆரோக்கியமாக பேண பல் துலக்கினாலே போதும், அதற்கு டூத் பேஸ்டை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை. டூத் பேஸ்டை  பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும், இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக துலக்குவது உங்கள் பற்களில் இருந்து நிறைய அழுக்கை அகற்றுவதைத் தடுக்கிறது. அதே சமயம் சுமார் நிமிடங்களுக்கு மேல் துலக்குவது உங்கள் ஈறுகளை சேதமாக்கலாம். 

10. எலக்ட்ரிக் டூத் பிரஷ் 

கையால் பல் துலக்குவதை விட எலக்ட்ரிக் டூத் பிரஷால் பற்களை சுத்தம் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கிறது. இதன் சுழற்சி, அதிரும் திறன் தான் அதற்கு காரணம். நாம் கையால் பல் துலக்கும்போது நிமிடத்திற்கு 300 முதல் 400 அசைவுகளை மட்டுமே மேற்கொள்கிறோம். எலக்ட்ரிக் டூத் பிரஷ் நிமிடத்திற்கு 48,000 இயக்கங்களை உருவாக்குகிறது. இதில் டைமர் (Timer) இருப்பதால் இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்குவதை உறுதி செய்கிறது. 

இதையும் படிங்க; 

click me!