நம்ம தாத்தா சாப்பிட்ட சிக்கனுக்கும், நாம் சாப்பிடுற சிக்கனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
நம்ம தாத்தா சாப்பிட்ட சிக்கனுக்கும், நாம் சாப்பிடுற சிக்கனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு தெரியுமா?

சுருக்கம்

நம்ம தாத்தா சாப்பிட்ட சிக்கனிலும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனிலும் பல வேறுபாடுகள் உள்ளன.

பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். ஆனால், அது இன்று உயிரைக் கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.

ஆன்டி-பயாடிக்ஸ்

சிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் உட்செலுத்துகின்றனர். இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.. அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.

பெரிதாக இருக்க

1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நன்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது. மேலும், ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலம் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது.

ட்ரக்ஸ்

ட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்-ல் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கின்றது. இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர்.

ஆர்சனிக்

ஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம். இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர்.

இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனித உடலுக்கும், ஆரோக்கியதிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சு முழுக்க நஞ்சு

சிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பு உண்ணும் பாகம். ஆனால், இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake