இதோ! கிராம்பில் இருக்கும் பலவித மருத்துவ குணங்கள்..

 
Published : Apr 13, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
இதோ! கிராம்பில் இருக்கும் பலவித மருத்துவ குணங்கள்..

சுருக்கம்

Medical benefits of kirambu

 

கிராம்பில் இருக்கும் சத்துகள்:

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

மருத்துவ பலன்கள்

1.. கிராம்பு சக்தியை ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது.

2.. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி.

3.. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

4.. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

5.. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

6.. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

7.. தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

8.. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

9.. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

10.. கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

11.. திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

12.. துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

13.. எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

14.. வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

15.. சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி