நீங்கள் அடிக்கடி தேநீரை சூடுபடுத்தி அருந்துபவரா..? ஜாக்கிரதை..!!

By Asianet TamilFirst Published Feb 11, 2023, 12:16 PM IST
Highlights

ஒருமுறை தேடிநீர் போட்டுவிட்டு, அதை அடிக்கடி சூடுபடுத்தி குடிக்கும் நபராக நீங்கள் இருந்தால், அந்த பழக்கத்தை இப்போதே கைவிட்டு விடுங்கள்.
 

இந்தியாவில் தேநீர் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம். அதில் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தேநீர் அருந்தக்கூடியவர்களாக இருப்பார்கள். காலை வேளையில் புத்துணர்ச்சி பெறவும், கலைப்படையும் போது சோம்பலை போக்கவும், வீட்டுக்கு விருந்தாளிகள் வருகை தரும் போது என பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய தேநீர் அருந்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தேநீர் தயாரித்து அருந்துவது கடினமான பணி. எனவே காலையில் தேநீர் வைத்தால், டீயை சூடுபடுத்தி எப்போது வேண்டுமானாலும் பருகலாம். இதனால் வேலை எளிதாகிவிடுவதாக நீங்கள் கருதலாம். ஆனால் ஒருமுறை சமைக்கப்பட்ட தேநீரை, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது உடலுக்கு ஆபத்தானது. இதுகுறித்து மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

மாறுபடும் சுவை

சுவை, வாசனை மற்றும் வெப்பம் உள்ளிட்டவை தான் தேநீரின் சிறப்பு. தேநீர் ருசிக்க வேண்டிய அளவு சூடாக இருக்க வேண்டும். டீயை திரும்பத் திரும்ப சூடுபடுத்தினால் சுவை போய்விடும். இந்த வாசனையும் நீடிக்காது. மேலும் தேநீரின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் பறிபோய்விடும்.  காலையில் செய்த டீயை மதியம் குடித்தால் வயிறு கெடும். வயிற்று வலி, வீக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

நுண்ணுயிர்கள் வளர்ச்சி

டீயை மீண்டும் சூடுபடுத்துவதால் அதன் சத்து குறைகிறது.நீண்ட நாட்களாக காய்ச்சிய டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதால் ஆரோக்கியம் கெடும். நீங்கள் காய்ச்சும் தேநீரில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் பால் கொண்டு தான் தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேநீரில் பாலின் அளவு அதிகம். இதன் காரணமாக நுண்ணுயிர் வளர்ச்சி அதிகரிக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நெஞ்செரிச்சல் வரும்

ஒரு முறை செய்து, நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடுபடுத்தினால், தேநீரில் வேதியல் மாற்றம் நடக்கக்கூடும். அதை சாப்பிடும் போது உடல்நலன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது நெஞ்செரிச்சல் மற்றும் நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

காலையில் அரிசிச் சோறு சாப்பிடுபவரா நீங்கள்..?? அப்போ இதப்படிங்க மொதல்ல..!!

செரிமான அமைப்புக்கு இடையூறு

சூடான தேநீரை அடிக்கடி உட்கொள்வது செரிமான அமைப்பை பாதிக்கிறது. தேநீரில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் அமிலத்தின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதனால் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மலம் கழிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி தேநீரை அருந்தவேக் கூடாது. தேநீர் தயாரித்த உடனேயே உட்கொள்வது தான் மிகவும் நல்லது. சூடு செய்து குடிக்க வேண்டும் என்றால் டீ தயாரித்த 15 நிமிடத்தில் சூடு செய்து குடிக்கலாம். இது வெறும் பால் டீ மட்டுமல்ல டீ டிக்காக்‌ஷனுக்கும் பொருந்தும்.

click me!