மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு...! ஆச்சர்யத்தில் ஆராச்சியாளர்கள்...!

First Published Apr 7, 2018, 7:58 PM IST
Highlights
New element detection in the human body


மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், இந்த புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

'இன்டர்ஸ்டிடியம்' என்கிற இந்த பாகம், தோளுக்கு அடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்கப் பயன்படுகிரதாம்.

இந்த உறுப்பானது உடலில் உள்ள அனைத்துப் பாகங்களுடனும் இழைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், ரத்தக்குழாய்கள் மற்றும் தசைகளுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. 

'இன்டர்ஸ்டிடியம்', உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. 

இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் சோதனை செய்தபோது. அவர்கள் அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  புற்றுநோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும் என்று கூறும் ஆய்வாளர்கள், புற்று நோயை கண்டு பிடிக்கவும், குணப்படுத்தவும் இது உதவும் என கூறியுள்ளனர். 
 

click me!