நீங்கள் நாவல் பழத்தை பார்த்தால் மறக்கமால் வாங்கி சாப்பிடுங்கள்... உடலுக்கு இவ்வளவு நல்லது தருகிறது...

First Published Apr 7, 2018, 1:04 PM IST
Highlights
If you look at the fruit of the novel eat it ... the arrow to the body is good ...


இயற்கை, ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறும் தன் படைப்புகளை அளித்துள்ளது.

அந்தவகையில், அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்ளும்போது மனிதனின் ஆரோக்கியம் பாதுகாப்பாகவே இருக்கும்.

இது பழ வகைகளுக்கும் பொருந்தும். அப்படி கிடைக்கும் அந்த பழங்களை தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை உடலுக்குப் பலன் தரும்.

இப்போது நாவல்பழ சீசன். ரோட்டோரங்களில் மட்டுமல்ல; பெரிய பெரிய கடைகளிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பழங்கள் இவை. சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்கும் இது உகந்தவை.

குறிப்பாக இரும்புச் சத்து நிறைந்தது. 

ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் தன்மையும் இதற்குண்டு. 

உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, ஜீரணத்துக்கும் உதவுகிறது. 

இதில் உள்ள துவர்ப்பு சுவை, தோலில் ஏற்படும் கொப்புளங்களைத் தடுப்பதோடு,தோலை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் நிறைந்த நாவல்பழம் உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, நீரிழிவு நோயிலிருந்தும் பாதுகாப்புத் தருகிறது. 

click me!