இந்த மூன்று வீட்டு மருந்துகளை சாப்பிட்டால் இருமல் பூரண குணமாகும் - பக்க விளைவுகள் வராதுங்க...

 
Published : Apr 07, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
இந்த மூன்று வீட்டு மருந்துகளை சாப்பிட்டால் இருமல் பூரண குணமாகும் - பக்க விளைவுகள் வராதுங்க...

சுருக்கம்

If you eat these three home medications cure is perfect - the side effects do not come ...

இருமல், சுவாசக் குழாயின் உண்டான பாதிப்பை உணர்த்தும் அறிகுறி. சுவாசக் குழாயில் கிருமிகள் அல்லது தூசு வரும்போது அதனை நீக்க முற்படும்போது வருவதுதான் இருமல். 

அதனை வெளியேற்ற சுவாசப் பகுதிகளில் எதிர்ப்பு செல்களும் அலர்ஜி செல்களும் போராடும். அந்த சமயங்களில் இருமல் உண்டாகும். இருமலில் இரு வகை உள்ளது. வறட்டு இருமல் மற்றும் தொற்றினால் உண்டாகும் இருமல். 

வறட்டு இருமல், தூசு போன்ற எரிச்சலூட்டக் கூடிய புகை ஆகியவற்றால் உண்டாகும் அலர்ஜி. கிருமிகளால் உண்டாகும் தொற்றினால் வரக் கூடிய இருமல்தான் சளியுடன் வரும் இருமல். 

அலர்ஜி மற்றும் ஜலதோஷம் ஆகிய இரு வகை இருமலுக்கும் ஏற்ற மூலிகை கலந்த நிவாரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளது. 

** மஞ்சள் பூண்டு கலந்த பால்: 

பாலில் இரு பூண்டு பற்களை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்கள். இரவுகளில் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சளில் கர்க்யூமின் என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் மூலக்கூறு உள்ளது. இது சுவாசத்தில் உள்ள அலர்ஜி மற்றும் கிருமிகளை விரட்டிவிடும்.

** அமிழ்தவள்ளி ஜூஸ்:

உங்களுக்கு நாள்பட்ட இருமல் தொடர்ந்து இருந்தால் இந்த கசாயம் மிகவும் பலனளிக்கும்.  அமிழ்த வல்லி சாறு ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். தினமும் காலையில் 2 ஸ்பூன் இந்த சாறினை குடித்து வந்தால், இருமல் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

** தேன் மற்றும் அதிமதுரம்: 

தேன், அதிமதுரப் பொடி மற்றும் பட்டைப் பொடி ஆகியவற்றை சம அளவிலான கால் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை என இரு வேளைகளில் குடித்தால் விரைவில் குணமாவீர்கள். அருமையான மருந்து.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்