தொப்பையை குறைக்க இயற்கை மருத்துவ வழிகள்…

Asianet News Tamil  
Published : Jan 14, 2017, 03:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
தொப்பையை குறைக்க இயற்கை மருத்துவ வழிகள்…

சுருக்கம்

1.. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2.. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3.. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4.. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5.. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6.. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

 

PREV
click me!

Recommended Stories

Moringa Powder: சாப்பாட்டில் முருங்கை பொடியை சேர்த்துகொள்ளுங்கள்.. அப்புறம்.. உடல்பில் என்ன நடக்குது மட்டும் பாருங்கள்
Lassi Recipes: சத்து மாவு முதல் ஸ்ட்ராபெர்ரி வரை... வெயிலுக்கு இதமான 5 ஜில் லஸ்ஸி ரெசிப்பீஸ்!