கீல்வாதம் முதல் சரும ஆரோக்கியம் வரை- பலரும் அறிந்திராத கடுகு எண்ணெய் நன்மைகள்..!!

By Dinesh TG  |  First Published Jan 8, 2023, 11:01 AM IST

இந்திய சமையலில் சமையல் எண்ணெய்கள் முக்கியமானவை. அதிலும் கடுகு எண்ணெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதற்கு காரணம், இது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கிடையாது என்பதே ஆகும்.
 


நம் நாட்டின் சமையலறையில் மாற்ற முடியாத பொருட்களில் ஒரு எண்ணெய். இது அனைத்து நாடுகளுக்கும் பொது என்றாலும், இந்திய சமையலறைகள் சற்று தனித்துவமானது. ஒவ்வொரு சமையலுக்கும் ஒவ்வொரு எண்ணெய்யை பயன்படுத்தும் முறைகள் நம்மிடையே நிலவுகின்றன. எள்ளு எண்ணெய் என்கிற நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் என பல்வேறு எண்ணெய்கள் இருந்தாலும், கடுகு எண்ணெய் சற்று தனித்துவமானது. 

அதை உணவில் சேர்த்துக் கொண்டால், பல்வேறு நோய் பாதிப்புகளை வராமல் தடுக்க முடியும்.கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Latest Videos

undefined

இந்தியாவில் பலதரப்பட்ட சமையல் அறைகளை ஒருங்கிணைக்கும் பகுதியாக சமையல் எண்ணெய்களை குறிப்பிடலாம். கடுகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை விட ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில் சிறந்தது. கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. நம் உடலுக்கு 3:1 என்ற விகிதத்தில் எண்ணெய் தேவைப்படுகிறது.இது நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இது இதயத்துக்கு நல்லது. இது சருமத்தை பொலிவாக்கி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

உங்கள் உணவில் கடுகு எண்ணெயைச் சேர்ப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த எண்ணெயில் MUFA அதிகமாக உள்ளது, இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். இது உங்கள் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

கடுகு எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. இது பொடுகு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், உங்கள் தலைமுடியை வலுவாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. 

கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் இது பெருங்குடல் புற்றுநோய் செல்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதை தொடர்ந்து சமையலில் சேர்த்து வருவதன் மூலம்,  கீல்வாதம் போன்ற பிரச்னைகள் கூட ஏற்படுவது கிடையாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். கடுகு எண்ணெயை கால்களில் தடவுவது அந்த பிரச்னைக்கு தீர்வை தரும். ஏனெனில் இதில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இருக்காது. கடுகு எண்ணெய்யை இயற்கை வழங்கிய சன்ஸ்கிரீன் என்று கூறலாம்.
 

click me!