புதியதாக வாங்கப்பட்ட பொருட்களை விடவும், பழையதான பொருட்களை சாப்பிடுவது மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அப்படியொரு நன்மையை வழங்கக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் வெல்லம்.
சக்கரையைக் காட்டிலும் வெல்லம் நம் ஆரோக்கியத்துக்கு நன்மையை வழங்கக் கூடியதாகும். இதில் பல்வேறு ஆயுர்வேத குணநலன்களும் உண்டு. அதன்காரணமாக ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சுவாசப் பிரச்னைகள், தொண்டை அடைப்பு, வயிறு உபாதைகள் போன்றவற்றுக்கான மருந்துகளில் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இயற்கையான இனிப்பு தன்மை இடம்பெற்றுள்ளது. இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. எனினும் மக்கள் பலர் புதிய வெல்லத்தை வாங்கித் தான் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் வெல்லம் எவ்வளவு பழையதாகிறதோ, உடலுக்கு அந்தளவுக்கு நன்மையை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெல்லம் சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் எதுவும் வராது. இருதயம் மற்றும் வாதப் பிரச்னையும் இருக்காது. பழைய வெல்லத்தை பயன்படுத்துவதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படும். அதேசமயத்தில் புதிய வெல்லம் சாப்பிடுவதால் வயிற்றில் புழுக்கள் உருவாகலாம். அதன்மூலம் குடல் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.
திடீரென உடல் எடை கூடுகிறதா? அதற்கு தீர்வு இதுதான்..!!
பழைய வெல்லத்துக்கு எப்போதும் உப்புச் சுவை இருக்கும். அதை வைத்து வெல்லம் எவ்வளவு பழையது என்பதை அறியலாம். மேலும் பழைய வெல்லம் அடர் நிறத்தில் இருக்கும், அதிலிருக்கும் உப்புத் தன்மை வெல்லத்தின் நிறத்தை மாற்றுகிறது. வெல்லத்துக்கு நல்ல நிறத்தை தருவதற்கு சோடியம் பைகார்பேனேட் மற்றும் கால்ஷியம் பைகார்பேனட் என்கிற வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
அதனால் வெல்லத்தை தரத்தை அறிவதற்கு, அதிலுள்ள சிறு துகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். அப்படி தண்ணீருடன் கலந்துபோன வெல்லத்தில் இருந்து வெள்ளையான படிமங்கள் கீழே படிந்தால், அது கலப்படம் வெல்லமாகும். ஒருவேளை அப்படியில்லாமல் தண்ணீர் மஞ்சளாக இருந்தால், அது சுத்தமான வெல்லமாகும்.
சக்கரைக்கு மாற்றாக எல்லோரும் வெல்லத்தை பயன்படுத்தலாம். சாதாரணமாக நாம் அருந்தும் தேநீர் முதல் பாயசம் வரை வெல்லத்தை பயன்படுத்தலாம். ஆனால் பாலுடன் சேர்த்து மட்டும் அதை குடிக்கக்கூடும். இரண்டுடைய பண்பு நலன்களும் வேறும். அவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டா உடலில் சில பிரச்னைகள் உருவாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றன. கண் பார்வை துல்லியமாக தெரிவதற்கும், எலும்பு ஆரோக்கியம் மேம்படுவதற்கும் உணவில் அடிக்கடி வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம்.