மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதாகும். வயிற்று வலி, கை, கால் வலி, தலைவலி, முதுகு வலி, வீக்கம், மனநிலை மாற்றங்கள் போன்ற சங்கடங்களுடன் சிலருக்கு தொற்றும் ஏற்பட்டு, சில மாதங்களில் இதனால் மாதவிடாய் தள்ளிச் செல்வதும் உண்டு. இதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என்று பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் சிலருக்கு தொற்று ஏற்படுவது வழக்கம். மாதவிடாய் காலங்களில் போதிய சுகாதாரம் பேணாவிட்டால் தொற்று பாதிப்பு ஏற்படலாம். மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதாகும். வயிற்று வலி, கை, கால் வலி, தலைவலி, முதுகு வலி, வீக்கம், மனநிலை மாற்றங்கள் போன்ற சங்கடங்களுடன் சிலருக்கு தொற்றும் ஏற்பட்டு, சில மாதங்களில் இதனால் மாதவிடாய் தள்ளிச் செல்வதும் உண்டு. இதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என்று பார்க்கலாம்.
உடலில் ஏற்படும் கடுமையான ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, ஒரு வகையான பூஞ்சை வளர்ச்சி அதிகரித்து, பிறப்புறுப்பில் தொற்றை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு உடம்பில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உச்சத்தில் இருக்கும். மாதவிடாய் தொடங்கியவுடன் இது குறையத் தொடங்கும். புரோஜெஸ்ட்டிரோன் கூட இதே முறையைத்தான் பின்பற்றுகிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் கேண்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சியே தொற்றுக்கு காரணமாகிறது. இது ஈஸ்ட் தொற்றுகளை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரே நேரத்தில் உங்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சுழற்சி வல்வோவஜினிடிஸ் என்று அழைக்கின்றனர்.
உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிக்க வேண்டும்- ஏன் தெரியுமா?
அறிகுறிகள் என்ன?
undefined
வீக்கம், தொடர்ச்சியான அரிப்பு, வலி மற்றும் பிறப்புறுப்பில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தெரியலாம். இத்துடன் உடலுறவு அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
தொற்றுக்கான சிகிச்சை!!
ஈஸ்ட் தொற்றை மருத்துவர்கள் எளிதாக உடல் பரிசோதனை மூலம் கண்டறிந்து விடுவார்கள். சில நேரங்களில், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்கள். இந்த பிரச்சனை அடிக்கடி இருந்தால், மருத்துவரை அணுகி தொற்றுக்கு எதிரான மருந்துகளை சில நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அவ்வளவு எளிதாக அலட்சியம் செய்யக் கூடாது.
மன அழுத்தம் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்- ஆண்களே உஷார்..!!
என்ன உணவுகளை எடுக்கலாம்?