கடந்த 2020-ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக வெளியான புள்ளிவிவரங்களின் படி, சுமார் 2.26 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் 6.85 மில்லியன் பேர் உயிரிழந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் இந்நோய் பாதிப்பு கணிசமான ஆண்களையும் பாதிக்கிறது. ஆனால் பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை குறைவு தான். மேலும் ஆண்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுவது அரிதான ஒன்றாகவே உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்கும், வந்த பிறகு மன உறுதியுடன் சிகிச்சை முறைகளை எதிர்கொள்வதற்கும் பல்வேறுவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆண்களுக்கும் இந்த விழிப்புணர்வை கொண்டு செல்வது அவசியமாகிறது. ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான சில பொதுவான அறிகுறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
எந்த வயதுடைய ஆண்களுக்கு பாதிப்பு அதிகம்
நீங்கள் முதல் பத்தியில் படித்தது சரிதான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், ஆண்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். ஆண்களில் 60 வயதை கடந்தவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. நம் உடலில் ஏற்படும் பிஆர்சிஏ மரபணு மாற்றங்கள், குடும்பத்தில் யாருக்காவது மரபணு நோய் பாதிப்பு, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைந்தளவு சுரப்பது உள்ளிட்டவை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக உள்ளது.
மார்பகங்கள் கட்டி ஏற்பட்டால் சிகிச்சை முக்கியம்
மார்பகங்களில் கட்டி ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சாதாரண கட்டியாக இருக்கும், வலி எதுவும் ஏற்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் கட்டியை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் கடினமாக இருக்கும். அதை நகர்த்தவும் முடியாது. இந்த அளவு தான் கட்டிகள் வளரும் எனவும் கூற முடியாது. பல்வேறு வடிவங்களில், பல அளவுகளில் அது தோன்றலாம். உரிய மருத்துவ பரிசோதனை மூலமே கட்டிகள் குறித்த பாதிப்பு தெரியவரும். ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் மார்பகங்களில் உருவாகும் கட்டிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
முலைக் காம்புகளிலும் அறிகுறிகள் தோன்றும்
ஆண்களுக்கு மார்பு பகுதிகளில் புற்றுநோய் தோன்றினால், அதற்கான அறிகுறிகள் முலைக் காம்புகளில் தோன்றும். அதன்படி முலைக் காம்பு துளைகளுடன் காணப்படுவது, காயம்பட்டால் சீக்கரம் ஆறாமல் இருப்பது, அதனுடைய அளவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவது, முலைக் காம்புகள் தலைகீழாக தெரிவது, உட்பக்கமாக திரும்பி இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால் அலட்சியம் காட்டக்கூடாது. இதுதவிர முலைக் காம்பில் வலி, அரிப்பு மற்றும் செதில் வருவது போன்ற பிரச்னைகள் தென்பட்டாலும் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
இரவுச் சாப்பாட்டுக்கு இந்த உணவுகளை மட்டும் சாப்பிடக்கூடாது..!!
மார்பகப் பகுதிகளில் உணர்வுகள் விசித்திரமாக தோன்றவது
மார்பகப் பகுதிகளில் வலி, வேதனை மற்றும் முளைக் காம்புகளில் தெரியும் மாற்றங்களை தவிர, உணர்வுகளிலும் சில மாறுதல்கள் தோன்றும். திடீரென எடை அதிகரிப்பது மற்றும் எடை குறைவது போல தோன்றினால் உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள். எடையில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கவனித்து வாருங்கள். மார்பகப் பகுதிகளில் திசுக்கள் திடீரென அதிகரித்து காணப்பட்டாலும் அலட்சியம் காட்ட வேண்டாம். அதேபோல மார்பகத்தின் ஒரு பக்கத்தில் அரிப்பு ஏற்படுவது, வேதனை ஏற்படுவதும் முக்கிய அறிகுறியாகும். மேலும், மார்பகங்களின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டாலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.
நெயில் பாலிஷ் இருந்தா போதும் மருவை விரட்டி விடலாம்..!!
சரும பகுதியில் தெரியும் மாற்றங்கள்
பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புக்கு பரவக்கூடிய தன்மை உள்ளது. அதன்படி மார்பகப் பகுதியில் தோன்றும் புற்றுநோய், மார்பகத்தைச் சுற்றியுள்ள நிணநீர் மண்டலம் வழியே பரவ அதிக வாய்ப்புள்ளது. மார்பகப் பகுதிகளை ஒட்டியுள்ள உடல் பாகங்களில் நிணநீர் கட்டிகள் தோன்றுவதும், கட்டிகளுடைய வீக்கம் தீரவில்லை என்றாலும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல மார்பகப் பகுதிகளிலுள்ள தோல்களில் இருந்து செதில்கள் வருவது, வறண்டு திட்டுத் திட்டமாக மார்பகப் தோல்கள் தோன்றுவது போன்ற அறிகுறிகளும் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளை உணர்த்துகிறது.
பெண்களைப் போன்று ஆண்கள் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால் திடீரென குறிப்பிட்ட பகுதிகளில் தோன்றும் மாற்றங்களை கவனித்து வரவேண்டும். அந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால், அதை புறக்கணிக்க வேண்டாம். உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவது அவசியமாகும்.