சாப்பிட்ட உடனே உடலுக்கு சக்தியைத் தரும் பேரீச்சம்பழத்தின் பிற மருத்துவ குணங்கள்…

Asianet News Tamil  
Published : Jul 26, 2017, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
சாப்பிட்ட உடனே  உடலுக்கு சக்தியைத் தரும் பேரீச்சம்பழத்தின் பிற மருத்துவ குணங்கள்…

சுருக்கம்

medicinal properties of dates

பேரீச்சம்பழம்:

100 கிராம் பேரீச்சம்பழத்தில் 300 கலோரிச் சத்து நம் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் கால்சியச்சத்து அதிகமாகவும், பாஸ்பரஸ் வைட்டமின் `சி’ போன்றவற்றுடன் இரும்புச் சத்தும் இந்தப் பழத்தில் இருப்பதால் இது மிகச் சிறந்த டானிக் போலவும், செயல்படுகிறது.

* பேரீச்சம்பழம் பழுதடைந்துள்ள உடல் பாகங்களை சீர் செய்து உடனடியாக உடலுக்கு சக்தியைத் தந்துவிடுகிறது.

* கரும்புச் சர்க்கரையைவிட மிக உயர்ந்த தரமான பழச் சர்க்கரையும் மாவுச் சர்க்கரையும் இந்தப் பழத்தில் நமக்குக் கிடைக்கிறது.

* வியாதியிலிருந்து மீண்டவர்கள் இழந்த ஆரோக்கியத்தைப் பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரீச்சம்பழத்தைப் பாலில் கொதிக்க வைத்து இரவில் அருந்தி வந்தால் போதும்.

* பேரீச்சம்பழத்தை சாதாரணமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடனும் சாப்பிடலாம்.

* எளிதாக செரிக்கக் கூடியது பேரீச்சம்பழம். இதயவலி, இதய நோயினால் அவதிப்படுவோர்களுக் கும் நல்ல இயற்கை மருந்து.

* அஜீரணக்கோளாறு உள்ள குழந்தைகளுக்கும் பல்முளைக்கும் காலத்திலும் (குழந்தைகளுக்கு) பேரீச்சம்பழத்தை நசுக்கி தேன் சேர்த்து டீஸ்பூனால் கொடுத்தால் நலம் பயக்கும். பல்ஈறுகள் உறுதிப்படும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!