செல்சிதைவு ஏற்படாமல் இருக்க தினமும் மாதுளை சாறு குடிக்கணுமாம் - ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க...

First Published Mar 16, 2018, 12:57 PM IST
Highlights
Medical benefits of pomegranate juice


 

நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில்தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும், முக்கிய வளர்சிதை மாற்றங்களும் நடக்கின்றன.

வயதாக  ஆக, மைட்டோக்காண்ட்ரியாவின் செயல்பாடுகள் குறையும். இதனால் செல்லின் செயல்கள் பாதித்து, செல்சிதைவு ஏற்படுகிறது. இதனால் திச்சுக்கள் பாதிப்படைந்து படிப்படியாக உடலின் முக்கிய செயல்கள் பாதிக்கும். 

தசைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், வயதினால் உண்டாகும் நோய்கள் மெல்ல எட்டிப்பார்க்கும். இப்படித்தான் முதுமை நடக்கின்றது.

யுரோலிதின் ஏ என்ற ஒரு மூலக்கூறு, பாதிப்படைந்த மைட்டோகாண்ட்ரியாவில் மறுசுழற்சியை தூண்டி, அதன் செயல்களை ஊக்குவிக்கும். இதனால் செயல்கள் தேங்காமல் துரிதமாக நடந்து, முதுமையையும் அதன்பாதிப்புகளையும் விரட்டும் என்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பாட்ரி என்ர ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

இந்த ஆய்வினை உருண்டைப் புழுவிடம் சோதனை செய்யப்பட்டது. யுரோலிதின் ஏ மூலக்கூறுவை புழுக்களின் உடலுக்குள் உட்செலுத்தி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஒப்பீட்டு புழுவை விட , சோதனைப் புழுவில் ஆயுட்காலம் 45 % அதிகமாக நீடித்தது என்ற ஆய்வு குழு கூறியுள்ளது.

இந்த அற்புதமான மூலக்கூறுவான யுரோலிதின் ஏ வை உடலிலேயே உற்பத்தி செய்ய , நல்ல பேக்டீரியக்கள் தேவை. அவைகள்தான் சிறுகுடலில் இந்த மூலக்கூறுவை உற்பத்தி செய்கின்றன.

இந்த மாதிரியான நுண்ணிய ஆக்கப்பூர்வமான செயல்கள்களுக்கு நாம் உண்ணும் உணவும் மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அந்த வகையில் மாதுளம் பழ ஜூஸ் யுரோலிதின் மூலக்கூறுவை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இதனால் தசைகள் வலுப்பெற்று, இளமையாக இருக்க உதவுகின்றன, முதுமையை தள்ளிப்போட வைக்கும் என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் க்ரிஸ் ரின்ஸ்ச் கூறுகின்றார்.

click me!