கோடைக் காலத்தில் சாப்பிடும் முலாம் பழத்தில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் இருக்கு தெரியுமா?

 
Published : Mar 15, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
கோடைக் காலத்தில் சாப்பிடும் முலாம் பழத்தில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் இருக்கு தெரியுமா?

சுருக்கம்

Do you know how much of the medicinal benefits you have in the summer meal?

முலாம் பழத்தின் மருத்துவ நன்மைகள்

முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌து.

இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக உள்ளது.

** முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் குறைந்து, அழகான உடலமைப்பை பெறலாம்.

** முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால். இது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்க உதவுகிறது.

** முலாம் பழத்தில் உள்ள அடினோசைன், நமது உடம்பின் ரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

** முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இது செரிமானப் பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கும் அமிலத் தன்மையை அகற்றி, செரிமான பிரச்சனை இல்லாமல் தடுக்கிறது.

** முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தி, சருமத்தின் உறுதித் தன்மையை பாதுகாக்கிறது.

** சிறுநீர் பிரிப்புத் தன்மை முலாம் பழத்தில் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால், சிறுநீரக நோய் மற்றும் அதில் ஏற்படும் புண்கள் குணமாகும். எலுமிச்சை பழத்துடன் முலாம் பழத்தை சேர்த்து சாப்பிட்டால், கீல் வாதம் குணமாகும்.

** விட்டமின் A சத்துக்கள் முலாம் பழத்தில் அதிகமாக உள்ளதால், இது கண் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

** முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதை தினமும் ஜூஸ் செய்து குடித்தால், இதயத் துடிப்பை சீராக்கி, நமது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச் சோர்வு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

** நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும் குறைந்த சர்க்கரை மற்றும் கலோரி உள்ள உணவுகளை உண்பதால், அதிகப்படியான சோர்வை உணரக் கூடும். இதற்கு அவர்கள் முலாம் பழ ஜூஸ் சாப்பிட்டால் முழுமையான உடல் எனர்ஜி கிடைக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!