கொழுப்பை கரைத்து உடலை ஒல்லியாக்கும் சக்தி கிரீன் டீ-க்கு உண்டு…

 
Published : Oct 21, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
கொழுப்பை கரைத்து உடலை ஒல்லியாக்கும் சக்தி கிரீன் டீ-க்கு உண்டு…

சுருக்கம்

medical benefits of green tea

 

இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான்.

குறிப்பாக கிரீன் டீ-யில அதிக நன்மைகள் இருக்கு. கேன்சர், இதய நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ.

இதை தொடர்ந்து குடிச்சிட்டு வந்தால் கொழுப்பு கரையும். ஒல்லி ஆகலாம்,

மேலும், சக்கரை நோய் வராமல் காக்கலாம். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது.

தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.

கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு, முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

நோய் தொற்று கிருமிகளை நம்மிடம் அண்டவிடுவதில்லை.

பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

மனச்சோர்வில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

தலைவலியை போக்கும்.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்