மகளிர் நலனுக்கு மங்குஸ்தான்

 
Published : Jun 27, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
மகளிர் நலனுக்கு மங்குஸ்தான்

சுருக்கம்

mangustan fruit help for woman health

பழங்களின் ராணி' என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் நம் ஊரில் கிடைக்கும் பழம் அல்ல, மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.


இதை தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்று நோய் கிருமிகளையும்), காளான்களையும் அழிக்க பயன்படுத்தினர். மேலும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் வறட்சி அடைந்து எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

மகளிருக்கு மங்குஸ்தான்: மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும், அதிக ரத்தப்போக்கை குறைக்க, மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை, வாங்கி சாப்பிடுவது நல்லது அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், அதிக ரத்தப்போக்கு குறையும்.

மங்குஸ்தான் பழத்தில், எலும்புகளை பலப்படுத்தக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பழம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாக விளங்குகிறது. 


வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், வயதாவதை நிதானப்படுத்தவும், தோல் சுருக்கத்தை குறைக்கவும்,பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து, தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

மங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டு அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமடையும். சிறுநீர் நன்கு வெளியேற, மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க