
பாலில் இருந்து கிடைக்கும் தயிர் ஓர் அற்புதமான உணவுப் பொருள். தயிரில் ஏராளமான நன்மைகள் இருக்கு. இந்த தயிரை சாப்பிடுவதால் மட்டுமின்றி, சருமத்திற்கு பயன்படுத்தினாலும் நன்மைகள் கிட்டும்.
முக்கியமாக தயிரை சரியான நேரத்தில், சரியான பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலினுள் அற்புதங்கள் நிகழும். அவையாவன:
தயிருடன் தேன்:
தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது. தயிர் மற்றும் ஓமம்:
தயிருடன் ஓமம்
தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும்.
தயிருடன் கருப்பு உப்பு:
இந்த கலவை உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.
தயிருடன் சர்க்கரை:
தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
தயிருடன் மிளகு:
தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
தயிருடன் ஓட்ஸ்:
ஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும்.
தயிருடன் பழங்கள்:
பழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.
தயிருடன் மஞ்சள் மற்றும் இஞ்சி:
இந்த கலவையில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.
தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்:
இந்த கலவை மூட்டு வலியைக் குறைக்க உதவும் மற்றும் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையைத் தடுக்கும்.
தயிர் மற்றும் சீரகம்:
தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.