தூதுவளையை எப்படியெல்லாம் சாப்பிட்டால் என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கும்…

 
Published : Jul 15, 2017, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தூதுவளையை எப்படியெல்லாம் சாப்பிட்டால் என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கும்…

சுருக்கம்

Medical benefits of Solanum trilobatum

1.. தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி, ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.

2.. தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

3.. தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாக பசி எடுக்கும்.

4.. தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

5.. தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.

100 கிராம்  தூதுவளைக் கீரையில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து – 84.7 கிராம்

புரதம் – 3.9 கிராம்

கொழுப்பு – 0.7 கிராம்

தாதுஉப்புகள் – 3.8 கிராம்

நார்ச்சத்து – 2.3 கிராம்

சர்க்கரைச்சத்து – 4.6 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 334 மி.கி

பாஸ்பரஸ் – 52 மி.கி

இரும்பு – 5.0 மி.கி.

கலோரித்திறன் : 40 கலோரி.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க