தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் கறிவேப்பிலையின் பிற மருத்துவ நன்மைகள்…

 
Published : Jul 17, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் கறிவேப்பிலையின் பிற மருத்துவ நன்மைகள்…

சுருக்கம்

Other Medicinal Benefits of Beneficial Curry

கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையில் ஜூஸ்

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாக நீரில் கழுவி, அதை நன்றாக அரைத்து, அதன் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் வடிகட்டிய கறிவேப்பிலை சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கல்ந்து குடிக்கலாம்.

இல்லையெனில் அந்த கறிவேப்பிலை ஜூஸில் சில பேரிச்சம் பழங்களையும் ஊற வைத்து கூட அருந்தலாம்.

காலையில் டீ மற்றும் காபியை தவிர்த்து, கறிவேப்பிலை ஜூஸ் செய்து, அதில் தேங்காய்ப்பால் கலந்து கூட குடிக்கலாம்.

கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள்

1.. தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும்.

2.. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும் நரைமுடியை போக்குவதற்கு, கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.

3.. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகள் நீக்கி, கண் பார்வையை பிரகாசமாக்க தினமும் கறிவேப்பிலை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

4.. தினமும் ஒரு மாதம் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கறிவேப்பிலை ஜூஸ் செய்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகிவிடும்.

5.. கறிவேப்பிலையானது வெண்குஷ்டம், மூலம், தோல் நோய் போன்ற பிரச்சனைகளை போக்கும் தன்மை அதிகமாக உள்ளது. எனவே தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க