ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இப்படி நடக்குமாம். இந்த ஆய்வு சொல்லுவதை கேளுங்கள்...

First Published Apr 5, 2018, 1:43 PM IST
Highlights
Its like eating ice cream. Listen to this research ..


ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும். கொழுப்பு சத்தும் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்த ஆய்வை இத்தாலியின் வெகாடாவில் உள்ள ரோம் பல்கலைக்கழக பேராசிரியர் வெலேரியோ சாங்குஸ்கனி மேற்கொண்டார்.

ஐஸ்கிரீமில் கருப்பு நிற கோகோ பவுடர் மற்றும் பச்சை தேயிலையில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன. இவற்றில் ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ எனப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப்பு சக்திகள் உள்ளன.

இவை இருதயத்தை பலப் படுத்தி ஆரோக்கியமான முறையில் இயங்க உதவுகிறது. இதனால் மனித உயிரை குடிக்கும் நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

எனவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்று பேராசிரியர் வெலேரியோ தெரிவித்துள்ளார். 

"ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் மிக வேகமாக ஓட முடியும்" என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

click me!