மூட்டு வலிக்கு நல்லெண்ணெயை மிகச் சிறந்த மருந்து...பயன்படுத்தி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்...

 
Published : Apr 05, 2018, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
மூட்டு வலிக்கு நல்லெண்ணெயை மிகச் சிறந்த மருந்து...பயன்படுத்தி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்...

சுருக்கம்

Use good medicine for joint pain ... See good results ...

நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.

இதில் உள்ள சத்துகள்

நல்லெண்ணெயில் விட்டமின் ஈ, விட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

** நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

** நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

** உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

** நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

** நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

** நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

** மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

** நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.
 

PREV
click me!

Recommended Stories

Morning Habits For Belly Fat : நீண்ட ஆயுளுக்கு இது 'முக்கியம்' ஆரோக்கியமில்லாத தொப்பையை குறைக்க 'இதை' செய்தால் போதும்!!
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!