ஆண்களே! மீசை மற்றும் தாடி வளரவில்லை என்று இனி வருத்தம் வேண்டாம்... இதோ சூப்பர் டிப்ஸ்...

 
Published : Apr 04, 2018, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
ஆண்களே! மீசை மற்றும் தாடி வளரவில்லை என்று இனி வருத்தம் வேண்டாம்... இதோ சூப்பர் டிப்ஸ்...

சுருக்கம்

Gentlemen! Do not worry that the mustache and beard does not grow ... Here are some of the best tips ...

சின்ன வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். 

** ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். 

** நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம்.

** பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

** மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். 

** வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும்.

** பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும்.

இப்படி செய்யும்போது ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில் தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். 

முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், இரண்டு மாசத்துக்கு இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

** தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. 

** தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தால் காலப்போக்குல முடி முளைக்கும். 

** ஆம்பளைங்களுக்கு மீசை மற்றும் தாடி முடி வளரவில்லை என்றால் சின்ன வெங்காயத்தை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்