கோழிகளின் ஈரல் - மனிதன் சாப்பிடுவதற்கு உகந்ததா?

By Dinesh TG  |  First Published Oct 19, 2022, 10:45 PM IST

கோழியின் ஈரலை சாப்பிடுவது மனித நலனுக்கு உகந்தது கிடையாது என்றும் சொல்லப்படுகின்றன. இதனால் கோழியின் ஈரல் மனித நலனுக்கு எதிரானதா? அல்லது நல்லதா? என்கிற சந்தேகம் தொடர்ந்து பலரிடம் நிலவுகிறது.


வர்த்தக நோக்கத்துடன் கோழிக் கறி உணவு பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, பல்வேறு சந்தேகங்கள் இறைச்சி சாப்பிடுவது குறித்து தோன்ற ஆரம்பித்துவிட்டன. அதிலும் கோழிக்கறி என்றால் கொஞ்சம் எச்சரிக்கையாகி விடுவோம். குறுகிய காலத்தில் வளர்க்க வேண்டும் என்பதற்காக கோழிக்கறிக்கு ரசாயானம் கலந்த பொருட்கள் உணவாக வழங்கப்படுவதாகவும் பல்வேறு ஊசிகளை போட்டி கோழிகள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. 

அவகேடோ எண்ணெய் பலருக்கும் தெரியும்- ஆனால் அதனுடைய பலன் பற்றி தெரியுமா

Latest Videos

இதை சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்படக்கூடும் என்பது, அதுவும் கோழியின் ஈரலை சாப்பிடுவது மனித நலனுக்கு உகந்தது கிடையாது என்றும் சொல்லப்படுகின்றன. இதனால் கோழியின் ஈரல் மனித நலனுக்கு எதிரானதா? அல்லது நல்லதா? என்கிற சந்தேகம் தொடர்ந்து பலரிடம் நிலவுகிறது.

கோழியின் ஈரல் பலருக்கும் விருப்பமான பகுதியாகும். அது மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். நன்றாக நல்லெண்ணய் சேர்க்கப்பட்டு கொழம்பில் இருக்கும் ஈரலை சாப்பிட பல குடும்பங்களில் போட்டிய நடக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேர்த்து வைத்து வழங்குவது தான் ஈரலின் பணி. மனிதனுக்கு அப்படித்தான், மற்ற உயிரினங்களுக்கும் அப்படித்தான். குறைந்தளவில் முழுமையான சத்துக்களை ஈரலை சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.

உணவு சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவுமா?

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ரத்த அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு ஈரல் சாப்பிடுவது நல்ல பலனை தரும். இதன்மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, செலினியம், துத்தநாகம், போலிக் ஆசிட், பி12 உயிர்ச்சத்து போன்றவை அதிகளவில் கிடைக்கின்றன. கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தேவைப்படும் ஈரல், உடலுக்கு தேவையான புதிய ரத்த அணுக்களை உருவாக்கவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் ஈரலை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம். இதனுடன் பூண்டு சேர்த்து சாப்பிடும் போது இருதயத்துக்கு நலன் அதிகரிக்கிறது. முடிந்தவரை ஈரலை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நல்லண்ணெய், மிளகுத் தூள், உப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து ஈரலை வறுத்து சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது. இதுவே போதுமான சமையலாகும். 

click me!