பூண்டைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 12 அற்புத தகவல்கள்…

 
Published : Apr 03, 2017, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
பூண்டைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 12 அற்புத தகவல்கள்…

சுருக்கம்

Informations about garlic

 

பூண்டு:

#1

மத்திய ஆசியாவை பூர்வீகமாக கொண்டது.

#2 

மனிதர்கள் 7000 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

#3

பூண்டின் மீதான பயத்தை மருத்துவ ரீதியில் அல்லியும்ஃபோபியா என அழைக்கின்றனர்.

#4 

பூண்டை கற்பூரத்துடன் சேர்த்து எரித்தால், கொசுக்கள், பூச்சிகள் மற்றும் ஈக்கள் அண்டாது. நசுக்கிய பூண்டை தண்ணீருடன் கலப்பது, பூச்சிக் கொல்லிகளுக்கான பசுமை மாற்றாகும்.

#5 

பூண்டில் 17 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. அனைத்து உடல் சார்ந்த செயல்முறைக்கும் அமினோ அமிலங்கள் அத்தியாவசியமானது. மனித உடலில் 75%-க்கு இது தேவைப்படுகிறது.

#6 

சீன உணவில் அளவுக்கு அதிகமான பூண்டு இருக்கிறது. ஏனெனில், உலகளாவிய பூண்டு உற்பத்தியில் சீனா 65%- உற்பத்தி செய்கிறது.

#7 

முதல் உலகப்போரின் போது சல்பர் இருப்புகள் குறைந்த போது, உடற்பகுதி அழுகலுக்கு எதிராக கிருமிநாசினியாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

#8 

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதால் இதயத்திற்கு பூண்டு நல்லது என நம் அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி, சளி மற்றும் இருமலுக்கு எதிராகவும் அது போராடும். ப்ரோ-பயோடிக்கான அது குடல்நாளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

#9 

கையில் இருந்து பூண்டின் வாசனையை போக்க, குளிர்ந்த நீருக்குள் கையை விட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருளின் மீது தேய்க்கவும்.

#10 

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19 ஆம் நாளை பூண்டு தினமாக கருதுகின்றனர்.

#11

பூண்டை மாயவித்தைக்கான கொடியாக பார்த்தனர் ஐரோப்பியர்கள். தீய சக்திகள் மற்றும் காட்டேரிகளை எதிர்க்க சக்தி வாய்ந்த பொருளாக பூண்டை மத்திய ஐரோப்பிய புராணங்கள் கருதின.

#12

இஸ்லாமியத்தில், மசூதிக்கு செல்வதற்கு முன் பூண்டை பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அதன் கவனச்சிதறல் வாசனையே. இதே காரணத்திற்காக தான் இந்து மதத்தில் பலரும் இதனை உண்ணுவதில்லை. இது காம இச்சையை அதிகரித்து, தெய்வ பக்தியை அழித்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!