ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்தில் அதிகப்படியான சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.
ஒரு மூலப்பொருளாக விளங்கும் ரோஸ் வாட்டர், தோல் பராமரிப்புக்கு பல்வேறு சிறந்த நன்மைகளை வழங்கும் திறன் கொண்டது. இதை அனைத்து சருமங்களுக்கும் நாம் பயன்படுத்த முடியும். ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பழங்காலத்திலிருந்தே அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனுடைய பண்புகள் பண்புகள் சேதமடைந்த சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இது கிருமிநாசினியாகவும் செயல்படும் என்பதால், சருமத்துக்கு ஏற்படும் தொற்றுப் பாதிப்புகளை ஓரளவுக்கு தடுத்துவிடும். இதன்மூலம் ரோஸ் வாட்டரை சிறந்த சரும டோனர் என்றும் கூறலாம். சருமத்தின் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
இதை நாம் வாரமிருமுறை சருமத்தின் மீது தடவி வந்தால், அவ்வப்போது உருவாகும் அதிகப்படியான சரும உற்பத்தியை கட்டுப்படுத்தும். இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், தோல் சிவத்தல், தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
நீங்கள் அந்த நேரத்தில் மட்டும் ‘அதைச்’ செய்யக்கூடாது- மீறினால் அவ்வளவுதான்..!!
முகப்பரு பிரச்னை கொண்டவர்கள் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த கிளென்சரும் கூட. இது அடைபட்ட துளைகளில் இருந்து திரட்டப்பட்ட எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்றும். ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இது வடுக்கள், காயங்கள் மற்றும் வெட்டுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
முடி சம்மந்தப்பட்ட பிரச்னைக்கும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இது லேசான உச்சந்தலையில் வீக்கம் மற்றும் பொடுகுத் தொல்லைக்கு சிகிச்சையளிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ரோஸ் வாட்டரை சிறிது நேரம் குளிர வைக்கவும். அதில் காட்டன் பேட்களை நனைத்து, உங்கள் கண் இமைகளில் மெதுவாக தடவவும். உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.