சிகப்பழகை பெற சீயக்காய் பொடியை இந்த மாதிரி பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்...

 
Published : Jan 17, 2018, 02:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
சிகப்பழகை பெற சீயக்காய் பொடியை இந்த மாதிரி பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்...

சுருக்கம்

If you use this type of coconut powder to get rid of the smoker you get good results ..

பெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களை படையெடுப்பர். 

ஆனால், அவ்வாறு சிரமப்படாமல் சில ஈஸியான டிப்ஸ்களை பின்பற்றினாலே சில நாள்களில் சிகப்பழகை பெற முடியும். 


** சீயக்காய் 

சிகப்பழகை பெற முகத்தில் அழகு இருப்பது மட்டும் அவசியம் என்பது இல்லை. சருமத்தில் ஓரளவு எண்ணெய் பசை இருப்பது போல பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இப்படி சிகப்பழகூடன் கூடிய சர்மத்தை பெற சீயக்காய் ஒன்றை செய்து தேய்த்து கொண்டால், என்றும் அழகு நமது முகத்தில் ஜொலிக்கும்

தேவையான பொருட்கள்

சீயக்காய் - கால் கிலோ, பயறு - கால் கிலோ, வெந்தயம் - கால் கிலோ, புங்கங்கொட்டை - 100 கிராம், பூலான் கிழங்கு  – 100 கிராம்.

செய்முறை

இவை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டால், சீயக்காய் பவுடர் ரெடி. வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்காய் வரை எண்ணெய் தேய்த்து, இந்த பொடியை தலையில் நன்கு போட்டு அலசுங்கள். இதனால் தலையும் சூப்பராக சுத்தமாகி விடும். 

மேலும் தோலின் எண்ணெய் பசை ஓரேயடியாக ஓடிப்போகாமல், கருமையும் மறையத் தொடங்கும். 

சிகப்பழகை தரும் சிறந்த டிப்ஸ் 

** தலைய நல்லா கவனிங்க தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி விடும். 

** தலை சுத்தமாக இருந்தால்தான் சருமத்தின் கருமை படராது. 

** உடம்ப பார்த்துகோங்க 

** அடுத்ததாக கவனிக்க வேண்டியது சருமம்! வெளியில் போவதற்கு முன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து கொள்ளுங்கள் பிறகு மிதமான சுடுநீரில் அலம்பி துடைத்து விட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!