அவகாடோ சாப்பிடுவதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்!
அவகாடோ பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
health-food Jul 01 2026
Author: Ganesh A Image Credits:freepik
Tamil
இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
அவகாடோவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் கே, இ, சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
Image credits: Getty
Tamil
ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது
அவகாடோவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (A, D, E, K) உடல் உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
செரிமானத்தை எளிதாக்குகிறது
ஒரு அவகாடோ பழத்தில் சுமார் 14 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான குடல் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
Image credits: Getty
Tamil
கண் பார்வையை மேம்படுத்துகிறது
அவகாடோவில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கின்றன.
Image credits: Getty
Tamil
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
அவகாடோவில் வைட்டமின் E மற்றும் C அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Social Media
Tamil
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைப்பதில் அவகாடோ முக்கிய பங்கு வகிக்கிறது.
Image credits: Social Media
Tamil
முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
அவகாடோ தலையின் ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.