
வெயில் காலத்தில் பிசுபிசுப்பு பொடுகு அதிகம் உண்டாகும். மழைகாலத்தில் பூஞ்சை தொற்று அரிப்பு உண்டாகும். ஆனால் இவற்றையெல்லாம் சமாளித்து உங்கள் தலைமுடிக்கு அழகு தர உங்கள் சமையலறையில் இருக்கும் இந்தப் பொருள் உதவும்.
அதுதான் "தேங்காய் பால்".
** தேங்காப்பாலில் அதிக புரோட்டின் உள்ளது. கூடவே இரும்பு சத்தும் மெங்கனீசும் உண்டு. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். இவை கூந்தலை வளரச் செய்யும் என்பதை விட, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். பளபளக்க வைக்கும். அதைவிட மிக மென்மையான கூந்தலை தரும்.
தேவையானவை :
தேங்காய் பால் – முடிக்கேற்ப முட்டை – 1 ஆலிவ் எண்ணெய் – கால் கப் தேங்காய் எண்ணெய் – கால் கப் (அ) விளக்கெண்ணெய்
செய்முறை
முதலில் எடுக்கும் திக்கான தேங்காய்பாலில் முட்டை ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையில் ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் தேய்க்கவும்.
வேர்க்கால்களிலிருந்து, நுனி வரை தேய்த்து, 45 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் தலையை வெதுவெதுப்பான நீரில் அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகித்து அலசவும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். முடிஉதிர்தல் நின்று, அடர்த்தியாகவும், மிருதுவாகவும் கூந்தல் வளர்வதை கண்டு வாயை பிளப்பீர்கள்.