தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாதாம் - ஆய்வு சொல்லுது…

 
Published : May 27, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாதாம் - ஆய்வு சொல்லுது…

சுருக்கம்

If you eat the tomatoes you can not have a weight - the study says ...

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை கூடாமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது.

மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இதுகுறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறியது:

“இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்” என்றார்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க