இந்த விதையைச் சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் வரமால் தடுக்கலாம்...

 
Published : Jan 28, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
இந்த விதையைச் சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் வரமால் தடுக்கலாம்...

சுருக்கம்

இனிப்புச் சுவையை கொண்ட பப்பாளி பழத்தையும், அதனுடைய ஆரோக்கியம் நிறைந்த மருத்துவ குணங்களை பற்றியும் முழுவதும் நாம் அறிந்திருப்பதில்லை.

பப்பாளி பழத்தினை போன்றே அதனுடைய விதைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

பப்பாளி விதைகளில் உள்ள நன்மைகள்…

அ. பப்பாளி விதையில் இருக்கும் பெப்பைன் என்ற என்சைமைகள், நாம் சாப்பிடும் உணவுகளின் முழுமையான ஜீரணத்திற்கு உதவுகிறது.

ஆ. பப்பாளி விதைகள் நமது வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால், நமது வயிற்றில் இருக்கும் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் அழிந்துவிடும்.

இ. குழந்தைப் பேறுகளை தள்ளிபோட நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகள் இல்லாமல், இயற்கையான முறையில் கருத்தரிப்பை தடுப்பதற்கு, பப்பாளியின் விதைகள் பயன்படுகிறது.

ஈ. பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, நமது உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் அதை தடுக்கிறது.

உ. நமது உடம்பில் ஏற்படும் பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகளின் மூலம் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்குகிறது.

ஊ. பப்பாளி விதைகள் நமது உடம்பில் நோயை உருவாக்கக்கூடிய, ஸ்டைஃபைலோ கோக்கஸ், ஈ கோலை, மற்றும் சால்மோனெல்லா ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க