கொள்ளு சாப்பிட்டால் உங்களுக்கு குதிரை பலம் கிடைக்கும்…

 
Published : May 30, 2017, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
கொள்ளு சாப்பிட்டால் உங்களுக்கு குதிரை பலம் கிடைக்கும்…

சுருக்கம்

If you eat it you will get horse strength ...

1.. கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

2.. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

3.. கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

4.. உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.

5.. வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

6.. வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

7.. கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

8.. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது.

9.. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

10.. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
 

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்