தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உங்கள் உடலில் இதுபோன்ற நல்ல மாற்றங்கள் நடக்கும்...

First Published Mar 9, 2018, 1:35 PM IST
Highlights
If you eat an egg everyday such good changes will occur in your body ..


தினமும் ஒரு முட்டை 

முட்டையில் புரோட்டீன்கள், விட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்ற சத்துக்கள் இருப்பதுடன், கோலைன் என்ற ஒரு சிறப்பு பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே நாம் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால், நம்ப முடியாத பல்வேறு மாற்றத்தை நமது உடலில் காணலாம்.

** முட்டையில் உள்ள கோலைன் என்ற சிறப்பு பொருளானது, நமது உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

** கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் சாப்பிடுவதால், கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்து, ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.

** முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் விட்டமின் B12 போன்ற சத்துக்கள் முட்டையில் அதிகமாக உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால், நமது முடி உதிர்வு மற்றும் சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

** முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அதை நாம் வேகவைத்து சாப்பிடுவதால், அது நமது உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

** தினமும் நாம் முட்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நமது உடலின் மூளை, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

click me!