இந்த அற்புத பானத்தை குடித்தால் சர்க்கரை நோய் தீரும்; உடல் எடை குறையும்...

 
Published : May 11, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இந்த அற்புத பானத்தை குடித்தால் சர்க்கரை நோய் தீரும்; உடல் எடை குறையும்...

சுருக்கம்

If you drink this wonderful drink you will have diabetes Body weight will decrease ...

சர்க்கரை நோய் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் வருவதால், அவற்றை சரிசெய்து கொண்டு, இரத்த சர்க்கரை அளவையும், உடல் பருமனையும் குறைக்கும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம். 

உயர் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் இதோ....

தேவையான பொருட்கள்: 

கற்றாழை – 1 கொத்து 

அன்னாசிப்பழம் – 2 துண்டுகள் 

செலரி – சிறிது 

ஆரஞ்சு ஜூஸ் – 1 கப் 

ஆளி விதை – 2 சிறிய ஸ்பூன் 

பார்ஸ்லி – 1 கையளவு

செய்முறை: 

கற்றாழை, அன்னாசி போன்றவற்றை நன்கு கழுவி, தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு, அத்துடன் இதர பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் நேரம்: 

இந்த பானத்தை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பின் குடிக்கலாம். இந்த பானத்தை வாரத்திற்கு மூன்று முறை, அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே மிகவும் நல்லது.

குறிப்பு:

வெளியே நீண்ட நேரம் இந்த பானம் இருந்தால், அது அந்த பானத்தில் உள்ள மருத்துவ குணத்தை இழக்கச் செய்துவிடும். 

நன்மைகள்:

1.. இந்த பானம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை வேகமாக குறைக்க உதவும்.

2.. உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடித்து வருவது மிகவும் நல்லது. இதனால் எடை வேகமாக குறைவதோடு, இரத்த சர்க்கரையும் அதிகமாகாமல் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க