செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

 
Published : May 11, 2018, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

சுருக்கம்

important notifications regarding nursing students

நர்சிங் படிப்பு முடித்தவர்கள்,தமிழ்நாடு  நர்சிங்  கவுன்சில்சில் ரிஜிஸ்டர் செய்திருக்க  வேண்டும். பின்னர் ஒரு முறை பதிவு செய்த வுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நர்சிங் தொடர்புடைய செமினார்  வகுப்புகளில் பங்கு பெற்று இருக்க வேண்டும். 

இது குறித்து தமிழ்நாடு நர்சிங் கவுல்சில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதில்,

வழிமுறைகள்

1. ஜூலை 2013 முதல் நர்சிங் பதிவு உரிமம் புதுப்பித்தல் 5 வருடங்களுக்கு ஒரு முறை 150 CNE Credit Hours-உடன் கட்டாயமாக செய்யப்பட வேண்டும்.

2. தங்களுடைய நர்சிங் பதிவுகள் மற்றும் கடந்த ஐந்து வருடங்களில் நீங்கள் பெற்ற CNE Credit Hours-களை சரி பார்க்கவும். உங்களுடைய CNE Credit Hours 150 க்கும் குறைவாக இருந்தால், உங்களால் இந்த சேவையை தொடர முடியாது. எனவே, உங்களுடைய CNE Credit Hours-ஐ தெரிந்துக்கொள்ள இந்த screen-ல் கீழே உள்ள "Continue to Verify" button-ஐ உபயோகிக்கவும்.

3. உங்களுடைய விடுபட்ட CNE Credit Hours-களை சேர்த்துக்கொள்வதற்கான கோரிக்கையை மேற்கூறிய முறையில் செய்யலாம்.

4. உங்கள் கோரிக்கையை TNNMC அலுவலர்கள் ஆய்வு செய்த பின் அதன் முடிவு உங்களுடைய பதிவு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

5. உங்களுடைய நர்சிங் உரிமம் புதுப்பிக்க உங்களுடைய பதிவு நாள் Expiry Date-ல் இருந்து மூன்று மாத காலம் சலுகையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உங்களால் புதுப்பித்தலை Online வழியாக செய்ய இயலாது. எனவே நேரில் வந்து உரிய ஆவணங்களை கொடுத்த பின்னரே பதிவு புதுப்பித்தல் செய்ய இயலும்.

6. உங்களுடைய TNNMC-ன் உடனான பதிவுகளின் விவரங்கள் மற்றும் நீங்கள் இதுவரை கடந்த ஐந்து வருடங்களில் பெற்ற கூட்டு CNE Credit Hours விவரங்கள் திரையில் காட்டப்படும். இதில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் 044-2493 4792 / 91-44-4678 6539 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க